தமிழகத்தில் இன்று
கே: இலங்கைப் பிரச்சனையில் ம.தி.மு.க., பா.ம.க., ஆகிய கட்சிகள் இரட்டைவேடம் போடுகின்றன என்று குற்றம் சாட்டுகிறாரே வாழப்பாடி ராமமூர்த்தி?
ப: மத்திய ஆட்சியில் ஈழ மறுப்புக்கு ஒத்துழைப்பு வேடம்; தமிழகத்தில் ஈழ வேடம்"என்பதை வாழப்பாடி சுட்டிக் காட்டுகிறார். ஆனால் இவர்களுடைய நடிப்பு, அத்துடன்நிற்கவில்லை. இடையில் இலங்கையில் உள்ள எந்த அமைப்புக்கும் எங்கள் ஆதரவுஇல்லை என்று இவர்கள் எடுத்த நிலையையும் சேர்த்துப் பார்த்தால் - மூன்றுவேடங்கள் ஆகிறது.
கே: நான் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவன் என்பதால், என் மீது பழிசுமத்துகின்றனர் என்று கூறுகிறாரே அஸாருதீன்?
ப: இது சின்னத்தனமான பேச்சு என்ற என் கருத்தை ஏற்கனவே தெரிவித்தேன்.இப்போது அஸாருதீன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். நொண்டிச்சாக்கு ஏதாவது கிடைக்காதா என்ற ஆதங்கத்தில் அவர் பேசி விட்ட பேச்சு என்றுகருதி, இதை இதோடு விட்டு விடுவதுதான் நல்லது.
கே: அரசியல் அசுத்தமாகி விட்டது; அதனால் அரசியலை விட்டு ஓய்வு பெறப்போகிறேன் என்று ராமகிருஷ்ண ஹெக்டே கூறியிருப்பது பற்றி...?
ப: இதில் வியப்பொன்றுமில்லை. நல்லவர்கள் ஒதுங்க நினைக்கிற நேரம் தொடங்கிஒரு சில வருடங்கள் ஆகி விட்டன.
கே: மூப்பனார் இடத்தில் நீங்கள் இருந்தால், இப்போது என்ன செய்வீர்கள்?
ப: பா.ஜ.க. மதவாதக் கட்சி - என்ற வாதம் இனி எடுபடப் போவதில்லை என்பதைப்புரிந்து கொண்டு, பா.ஜ.க. உறவிற்கான கதவைத் திறந்து வைப்பேன்.
கே: "கிரிக்கெட்டில் ஊழல் செய்யாதவர் என்று ஒருவரை எப்படிகண்டுபிடிப்பது?
ப: ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், கும்ப்ளே போன்றவர்கள் பாட்டிங்கிலும் -அஸாருதீன். திராவிட், ஜடேஜா போன்றவர்கள் பெளலிங்கிலும் - விட்டுக்கொடுப்பதாகப் பேசி பணம் வாங்கியிருக்க மாட்டார்கள் என்று நிச்சயமாக நம்பலாம்.
கே: திரை உலகத்திற்கு என்ன செய்தீர்கள்; பத்திரிக்கை உலகத்திற்கு என்னசெய்து வருகிறீர்கள்?
ப: திரை உலகத்தை - சீக்கிரம் விட்டு விட்டேன்; பத்திரிக்கை உலகில் - லேட்டாகப்புகுந்தேன்.
கே: தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமானது தான தமிழ் ஈழம்.அதனால் தமிழ் ஈழம் கிடைக்க எங்களுடன் சேர்ந்து முஸ்லிம்களும் போராடவேண்டும் என்று விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்களே?
ப: முன்பு முஸ்லிம்கள் மீது தாங்கள் நடத்திய தாக்குதல்களை அவர்கள் மறந்து விடவேண்டும் - என்பது விடுதலைப் புலிகளின் வசதியான எண்ணம். எடுபடாது.
கே; தேர்தலுக்கு 3 மாதம் முன்பே ஆட்சியை கலைத்து விட்டு, கவர்னர்ஆட்சியின் கீழ் தேர்தல் நடைபெற வேண்டும் என்று தேர்தல் கமிஷனர் கில்கூறுவது வரவேற்கத்தக்கதா?
ப: கவர்னர், மத்திய ஆளும் கட்சியின் தயவில் பதவி வகிப்பவர்; கவர்னர் ஆட்சிஎன்றால், மத்திய ஆளும் கட்சியின் குரலுக்கு அவர் செவி சாய்க்கும் வாய்ப்புஉண்டே? அது மட்டும் பரவாயில்லையா? தேர்தல் கமிஷனர் கூறுவது, ஏற்புடையதுஅல்ல.
கே: திடீரென பத்து பெண்கள் உங்களை பேட்டி காண வந்தால் உங்கள் நிலை...?
ப: ஒரு கவலையும் இல்லை. அவர்களே ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருப்பார்கள்; நான் போசாமல் கேட்டுக் கொண்டிருந்தால் போதும்; பேட்டிமுடிந்து விடும்.
கே: எல்.டி.டி.ஈ. அமைப்பை, தனித் தமிழ் அரசு அமைக்க அழைக்க முடியாது"என்று சந்திரிக்கா கூறியுள்ளது சரியா...?
ப: சரியான நிலைப்பாடுதான்.
கே: வரவர உங்களைப் புகழ்பவர்கள்அதிகரித்து வருகிறார்களே? இதுஉங்களுக்கு சோதனையா அல்லது உங்கள் சாதனையா?
ப: "திட்டிப் பார்த்து விட்டோம்; நிறுத்த மாட்டேன் என்கிறான்; புகழ்ந்து பார்ப்போம்;அதோடு திருப்தியடைந்தாவது நிறுத்துகிறானா என்று பார்க்கலாம் என்பது இவர்கள்திட்டம். நான் மயங்க மறுக்கிறேன்.
கே: சென்னையில் கட்டியுள்ள பாலங்களால் போக்குவரத்து நெரிசல் தீர்ந்ததா?
ப; ஒரு சில பாலங்களால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. ஆனால் வேறு சிலபாலங்களால் - நெரிசல் குறைந்ததாகத் தெரியவில்லை. இவை கட்டப்பட்டதேவேண்டாத வேலையோ - என்ற சந்தேகம் வருகிறது. பாலத்தில் இரு புறமும் சாலைகுறுகி, சந்து ஆகி விட்டதுதான் மிச்சமோ - என்ற அச்சம் வருகிறது. போகப்போகத்தான் பார்க்க வேண்டும்.
கே: "நான் நக்கீர பரம்பரையில் வந்தவள் என்று கூறியுள்ளாரே ஜெயலலிதா?
ப: சரி. நக்கீரரை ஆட்கொண்ட சிவ பெருமான் யார்? உடன் பிறவா சகோதரிதானே!தருமி - வீரமணியோ என்னவோ!
கே: வி.பி சிங் மீண்டும் இந்தியாவின் பிரதமராகி விட்டால்...? (ஒருகற்பனைக்குத்தான்).
ப: ஒன்றும் கெட்டுவிடா து.(இதுவும் ஒரு கற்பனைதான்)
கே: இன்ன கேள்விக்கு இன்ன பதில்தான் கூறுவீர்கள் என்பது தெரிந்திருந்தும்,கேள்வி கேட்கும் வாசகர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப: இன்ன பதில்தான் வரும் - என்று தெரிந்தே, மாணவனை கேள்வி கேட்கிறஉபாத்தியாயர்களாக நினைக்கிறேன்.
கே: ஒருவர் செய்யும் தவறை காப்பாற்றிக் கொள்ள, இன்னொருவர் செய்யும்தவறு உதவ முடியுமா?
ப: அந்த இருவரில் ஒருவர்தான் வேலைக்கு அமர்த்தப்படுகிற வாய்ப்பைப் பெறக்கூடிய நிலையில் இருக்கிறார் என்ற நிலைமை இருந்தால் - அப்போது ஒருவரின் தவறுமற்றொருவருக்கு கேடயமாகப் பயன்படும். இது சமூக நிலை. ஒருவர் தவறுமற்றொருவரின் தவறை நியாயமாக்கி விடாது- இது சட்டத்தின் நிலை.
கே: சொத்தை மாற்றிக் கொள்ளத் தயாரா? என்று எந்த நம்பிக்கையில்ஜெயலலிதா கேட்டார்?
ப: என்னுடைய மற்றும் என் உடன் பிறவா குடும்பத்தின் சொத்து கலைஞர் மற்றும்அவர் குடும்பச் சொத்து என்று ஜெயலலிதா கேட்கவில்லையே? என் சொத்து,கலைஞரின் குடும்பச் சொத்து என்றுதானே கேட்டிருக்கிறார்!
கே: தமிழ்நாடு காங்கிரஸில் இனி கோஷ்டிப் பூசல் என்ற பேச்சுக்கே இடம்இருக்காது என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளாரே?
ப: என்ன இது இவர் இப்படி பேசுகிறாரே? காங்கிரஸைப் பற்றி இவருக்கு ஒன்றுமேதெரியாது என்று கூறப்படுகிற குற்றச்சாட்டு நியாயமானதுதான் போலிருக்கிறதே!
கே: "கதை, வசனம் எழுதிய கலைஞருக்கு இத்தனை சொத்து என்றால்,கதாநாயகியாக நடித்த எனக்கு எத்தனை சொத்து இருக்கும்? என்று ஜெயலலிதாகேள்வி எழுப்பியுள்ளாரே?
ப: கருணாநிதி வசனம் எழுதிய காலத்தின் ஆயிரம் ரூபாய். ஜெயலலிதாகதாநாயகியாக நடித்த காலத்தின் பத்தாயிரம் ரூபாய்க்கு சமமானது ஆயிற்றே!
கருணாநிதி வசன காலத்தில் ஒரு கிரவுண்ட் 5,000 ரூபாய் என்றால், அதே கிரவுண்ட்ஜெயலலிதா காலத்தில் 50,000 ரூபாய் ஆயிற்றே! அதனால் இந்த ஒப்பீடு சரியாகவராது.
இருவரும் எவ்வளவு சம்பாதித்தார்கள என்பது தெரிய வேண்டும்; அதை எப்படிமுதலீடு செய்தார்கள் என்பதும் தெரிய வேண்டும்; திரையில் சம்பாதித்து முடித்த பிறகுபெற்ற சம்பாத்தியம் என்ன என்பதும் செய்த முதலீடுகள் என்ன என்பதும் தெரியவேண்டும்.
மேலும் இன்று உள்ள சொத்து மற்றும் இருவரின் ரொக்க விவரங்களும் தெரியவேண்டும். அப்போதுதான், இருவரின் சொத்து ஒப்பீடும், அது பெறப்பட்ட வகையின்தன்மையும் சரியாகப் புரியும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications