தமிழகத்தில் இன்று
கடலூரில் வன்முறை: 15 "விடுதலை சிறுத்தைகள்" கைது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட 15 விடுதலை சிறுத்தை அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் நடந்து வரும் தொடர் கொலைகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கோரி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கடந்த 23 ம் தேதிஊர்வலம் நடத்தினர்.
இதில் கலந்து கொள்வதற்காக கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலிருந்து விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் பலர் வேன்களில் சென்றனர்.
பெரம்பலூர் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக வேனில்சென்றனர்.
இந்த வேன் கடலூர் மாவட்டம் செங்கால்ஓடை அருகே வந்தபோது வேனில் இருந்த சிலர் கிராமத்தினரைப் பார்த்து கேலி செய்தார்கள்.
இதையடுத்து கிராம மக்கள் சிலர் அந்த வேன் மீது கல்வீசித் தாக்கினார்கள். இச்சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பஸ் மீது கல்வீச்சு, ஆர்ப்பாட்டம், வீடுகளுக்குத் தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன.
ஒரத்தூரில் அரிசி ஆலைக்குத் தீ வைக்கப்பட்டது. கும்பகோணம் ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்குப் போலீசார் விரைந்து சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காட்டுமன்னார்கோவில், சேதியாத்தோப்பு பகுதிகளில் எந்த அசம்பாவிதச் சம்பவமும் ஏற்படாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் நெல்லிக்குப்பம் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குத் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அங்கேயும் தற்போது அமைதி திரும்பிவருகிறது எ-ன கூடுதல் டிஜிபி கோவிந்த் தெரி-வித்-தார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications