மே.இ. தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு
லண்டன்:
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவதுகிரிக்கெட் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
3 நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், அந்த அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில்188 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் மோசமாக விளையாடி54 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 9 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் என்ற நிலையில், வெள்ளிக்கிழமைகாலை தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிமேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கேம்ப்பெல் 82 ரன்களும், ஹைன்ட்ஸ் 59 ரன்களும்எடுத்தனர். இங்கிலாந்து அணியில் கோ, கார்க் இருவரும் தலா 4 விக்கெட்டுகளைவீழ்த்தினர்.
அடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. மேற்கிந்தியத் தீவுகள்அணியின் ஆம்புரோஸ், வால்ஷ் இருவரின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்துவீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானார்கள்.
இறுதியில் 134 ரன்களுக்கு இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை இழந்தது.அணியிலேயே அதிகபட்சமாக ஸ்டூவர்ட் 28 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள்அணியில் ஆம்புரோஸ், வால்ஸ் இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இங்கிலாந்தை 134 ரன்களுக்கு சுருட்டியதுடன் 133 ரன்கள் முன்னிலையுடன் தனதுஇரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாகமேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆட்டம் இருந்தது.
முதல் இன்னிங்ஸை குறைந்த ரன்களுக்கு இழந்ததை அடுத்து இங்கிலாந்து அணியின்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாகப் பந்து வீசினர். காட்டிக், கார்க், கோ ஆகியோர்சிறப்பாகப் பந்து வீசி மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களை அவுட்டாக்கினர்.
ரிட்லி ஜேக்கப் மட்டும் இரட்டை இலக்கமாக 12 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ஒற்றைஇலக்க ரன்களில் அவுட்டானார்கள். இறுதியில் 26.4 ஓவரில் 54 ரன்களுக்குமேற்கிந்தியத் தீவுகள் அணி அவுட்டானாது.
டெஸ்டின் 2-வது நாளில் மட்டும் 21 விக்கெட்டுகள் வீழ்ந்தன என்பதுகுறிப்பிடத்தக்கது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியை 54 ரன்களில் சுருட்டியதுடன் மட்டுமல்லாமல்இரண்டாவது இன்னிங்ஸில் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில்,தனது இரண்டாவது இன்னிங்ஸை இங்கிலாந்து தொடங்கியது.
ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழக்காமல் ரன் ஏதும் எடுக்காமல்இருந்தது.
இன்னும் 3 நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு அதிக வெற்றிவாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications