தமிழகத்தில் இன்று
ஆஸ்திரேலியாவிடம் அடைக்-க-லம் கோ-ரும் பிஜி இந்தியர்கள்
சிட்னி:
பிஜியில் குழப்பமான சூழ்நிலை தொடர்வதாலும், உயிர் மற்றும் உடமைகளைக் காக்கும் விதத்திலும் ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் புக பல பிஜிஇந்தியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் நிறவெறி இருப்பினும் கூட அதைப் பொருட்படுத்த இந்தியர்கள் தயார் இல்லை. தங்களை அனுமதிக்க விசா கெடுபிடிகளைத் தளர்த்தவேண்டும் என்று கோரி 10,000க்கும் மேற்பட்ட பிஜி இந்தியர்கள், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தூதரகங்களுக்குக் கோரிக்கை மனுஅனுப்பியுள்ளனர்.
1870-களில் பிஜியில் இந்தியர்கள் கு-டி-யே-றி-னர். கரும்புத் தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காக இவர்கள் இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டனர். பிஜியில் இப்போதைய இந்தியர்களின் எண்ணிக்கை 44 சதவீதமாகும். மொத்தம் 8,20,000 இந்தியர்கள் பிஜியில் உள்ளனர். இவர்களில் 90சதவீதம் பேர் வரி கட்டுகின்றனர். தீவின் பொருளாதாரமே இவர்களை நம்பித்தான் உள்ளது.
பிஜியின் முதுகெலும்பாக இந்தியர்கள் இருந்தாலும் கூட அவர்களை இரண்டாம் தர மக்களாகவே பிஜி இனத்தவர்கள் மதித்து வந்தனர். அவர்களுக்குஆட்சியில் பங்கு தரப்பட்டதில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு புதிதாக இயற்றப்பட்ட சட்டத்தின்படி நடந்த தேர்தலில் இந்தியரான மகேந்திர பால்செளத்ரி வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.
பொறுப்பேற்று ஒரு வருடமே ஆன நிலையில் கடந்த மே மாதம் 19-ம் தேதி ஜார்ஜ் ஸ்பைட் தலைமையிலான பிஜி இனத்தவர்கள் குழு புரட்சி மூலம்ஆட்சியைக் கவிழ்த்தது. பிரதமர் செளத்ரி உள்பட பலர் நாடாளுமன்ற வளாகத்தில் பினைக் கைதிகளாக வைக்கப்பட்டனர்.
பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாக அறிவித்தது. அதன் பிறகு பிஜியில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.புலி வருகிறது கதையாக, ஒப்பந்தம் வருகிறது என்று ராணுவத் தரப்பிலும், புரட்சியாளர்கள் தரப்பிலும் மாறி, மாறி குழப்பி வருகின்றனர். ஆனால்எதுவுமே நடக்கவில்லை.
இந்த நிலையில், பிஜி இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற ஆர்வம் காட்டுகின்றனர். பக்கத்து நாடான ஆஸ்திரேலியாவுக்கு செல்ல அவர்களில்பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர். ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரானபோக்கு இருந்தாலும் கூட அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க அவர்கள் தயாராக இல்லை.
பிஜி வாழ் இந்தியர்கள் சுதந்திர அமைப்பின் செயலாளர் தில்தா ஷா கூறுகையில், பிஜியில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஆபத்து அதிகரித்து வருகிறது.ஒட்டுமொத்த சமுதாயமே அழிக்கப்பட்டு விடும் என்று அஞ்சுகிறோம்.
பல இந்தியர்கள், பிஜியிலிருந்து வெளியேற விரும்புகின்றனர். இதற்காக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் விசா கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி மனு கொடுக்கவுள்ளோம். இந்த மனுவில் தினசரி 1000 பேர் வீதம் கையெழுத்திட்டு வருகின்றனர். எங்களுக்கு உதவு இந்த இரு நாடுகளுக்கும்தார்மீக உரிமை உண்டு.
பிஜியில் வசிக்கும் இந்தியர்களில் 90 சதவீதம் பேர் வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கலாசார ரீதியாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவையாக உள்ளன. இந்தியாவுக்குச் சென்றால்தான் நாங்கள்அன்னியர்களாக உணர்வோம்.
1987-ல் ரபுகா தலைமையில் நடந்த புரட்சியின்போது 67,000 பிஜி இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் சென்று அடைக்கலம் புகுந்தனர் என்றார் அவர்.
கடந்த வாரம் ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்ட் கூறுகையில், பிரதமர் செளத்ரிக்கு பாதுகாப்பான அடைக்கலம் தர ஆஸ்திரேலியா தயாராகஉள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும், அடைக்கலம் கோரி இந்தியர்கள் அணுகினால், அதை பரிசீலிக்கத் தயார் என்றும் அவர் கூறியிருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications