தமிழகத்தில் இன்று
குழந்தைகளின் கை, கால்களை உடைக்கும் இலங்கை ராணுவ வீரர்கள்
ராமேசுவரம்:
தமிழ் வாலிபர்கள் மற்றும் குழந்தைகளின் கை, கால்களை உடைத்து இலங்கை ராணுவவீரர்கள் துன்புறுத்துவதாக ராமேசுவரம் வந்த அகதிகள் கண்ணிர் மல்க தெரிவித்தனர்.
சில நாள் இடைவேளைக்குப் பிறகு வெளிக்கிழமையன்று 22 ஆண்கள், 9 பெண்கள்,10 குழந்தைகள் உட்பட 11 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் அகதிகளாக வந்தனர்.இவர்கள் தணுஷ்கோடி அருகே உள்ள தாவுக்காடு கடற்கரையில் இறங்கினர்.
தனுஷ்கோடியில் முகாமிட்டு இருந்த இந்திய கடற்படை வீரர்கள் இந்த அகதிகள்படகில் வருவதைப் பார்த்துவிட்டு படகை சுற்றி வளைத்த போது படகை ஓட்டிவந்தவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். படகை ஓட்டி வந்தவர்களை கடற்படையினர்தேடி வருகின்றனர்.
அகதிகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, திரிகோணமலை பகுதியிலிருந்து தப்பிவந்தவர்கள், அவர்கள் கூறியதாவது:
இலங்கை ராணுவ வீரர்களின் கொடுமை அதிகமாக இருக்கிறது. சிலரை முகமூடியுடன்அழைத்து வந்து யார் யார் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என கேட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என சொல்லப்படுபவரை சித்திரவதை செய்து துன்புறுத்துவார்கள்.
அவர்கள் பிடித்துச் செல்லும் தமிழ் வாலிபர்களை என்ன செய்கிறார்கள் என்பதேதெரிவதில்லை. நாங்கள் 71 கிலோ மீட்டர் தூரம் நடந்து தலைமன்னார் வந்துஅங்கிருந்து படகில் தப்பி வந்தோம். இது வரை 1500 க்கும் மேற்பட்டோர் பிடித்துச்செல்லப்பட்டனர் அவர்கள் நிலை என்ன என்றே தெரியிவில்லை.
இலங்கை ராணுவ வீரர்கள், தமிழ் வாலிபர்கள், குழந்தைகளின் கை, கால்களைஉடைத்து கொடுமைப்படுத்துகின்றனர் என்றனர்.
சுதாகரன் என்பவர் கூறுகையில் எனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்குஅழைத்துச் செல்ல முயன்றேன். குண்டு வெடிப்பு காரணமாக அழைத்துச் செல்லமுடியாமல் தப்பி வந்து விட்டோம் என்றார். அவரது மனைவி தற்போதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இனி தமிழர்கள் இலங்கையில் தொடர்ந்து வாழ முடியாது. பலரும் தப்பி வரக்காத்திருக்கின்றனர் என அகதிகள் தெரிவித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications