தமிழகத்தில் இன்று
மாநிலங்களுக்கு சுயாட்சி தேவை என்--கி-றார் பஞ்சாப் முதல்வர்
சென்னை:
மாநில சுயாட்சி கோருவது பிரிவினை ஆகாது. மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கினால் இந்தியா மேலும் வலுவடையும் என்று பஞ்சாப் முதல்வர்பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்தார்.
ஈரோட்டில் நடைபெறும் மதிமுக மாநாட்டில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் நிருபர்களுக்குஅளித்த பேட்டி:
மாநில சுயாட்சிகோரிக்கையை திமுகவுக்குப் பின் அகாலிதளம்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்திய அரசியல் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்தைஅடிப்படையாகக் கொண்டது. ஆனால், நீண்ட காலமாக மத்தியிலும், மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றதால், மாநிலங்களின் அதிகாரம்கொஞ்சம் கொஞ்சமாக பறித்துக் கொள்ளப்பட்டன.
நாட்டில் கோடிக்கணக்கான ஏழைகள் உள்ளனர். மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தரப்படாவிட்டால், இந்த மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது.எனவேதான் நாங்கள் மாநில சுயாட்சி வேண்டும் என்கிறோம்.
இந்தியாவில் பஞ்சாப் மக்கள் 2 சதவீதம்தான் உள்ளனர். ஆனால், சுதந்திரத்துக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களில் 80 சதவீதம் பேர் பஞ்சாபைச்சேர்ந்தவர்கள். நாங்கள் தேசப்பற்று மிக்கவர்கள்.
இந்தியா வலுமிக்கதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.
மாநிலங்கள் வலிமையானவைகளாக இருந்தால்தான் இந்தியா வலுமிக்கதாக இருக்கும். உறுப்புகள் வலிமையாக இருந்தால்தான் உடல் வலிமையாகவிளங்கும். மாநில சுயாட்சி கோரிக்கை காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்த பாதிப்பும் வராது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையை கையாள வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. இந்த நாட்டுக்கு கவலை ஏற்படுத்தும் பிரச்சினைகளில் நாங்கள் கருத்துதெரிவிக்க முடியாது. இதுவொரு சர்வதேச பிரச்சினை என்றார் பாதல்.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications