தமிழகத்தில் இன்று
இலங்-கை- துண்-டா-டப்-பட்-டா-ல் இந்-தி-யா பொ-றுப்-பல்-ல - வைகோ
கோவை:
இனப்படுகொலையால் இலங்கை துண்டாடப்பட்டால் அதற்கு இந்தியா பொறுப்பல்லஎன தமிழக எழுச்சி மா-நாட்டில் ம.தி.மு.க, பொதுச் செயலர் வைகோ பேசினார்.
ஈரோட்டில் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகம் -நடத்திய இரண்டு -நாள்மா-நாட்டில் இறுதி -நாளான -நற்று பொதுச் செயலர் வைகோ மா-நாட்டு -நிறைவுஉரையில் பேசியதாவது:
இந்த தமிழக எழுச்சி மாநாடு பல்வேறு தடைகளைத் தாண்டி வெற்றிகரமாகநடந்துள்ளது. மா-நாடு தொடங்க இரண்டு 3 -நாள் இருந்தபோது -நான் மிகுந்தகவலையில் ஆழ்ந்திருந்தேன்.
மா-நாடு வெற்றிகரமாக -நடந்து கொண்டிருக்கும் வேளையில் எனது கவலையைப்பார்த்த உடன் பிறப்புகள், கவலை ஏன் என்று கேட்டனர். அந்த கவலைக்கு காரணம்,இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவரும் அத்வானி, ஈரோட்டில் கொல்லப்படுவார்என்ற அந்த அதிர்ச்சி செய்திதான் காரணம்.
இதனால் அவரை ஈரோட்டிற்கு வரவேண்டாம் எனக் கூறிவிடலாம் என எண்ணினேன்.இ து தொடர்பாக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினேன். ஆனால்அத்வானியோ, மாநாட்டில் கலந்து கொள்வேன், வைகோ இருக்கும்போது எந்தஆபத்தும் வராது எனக் கூறினார்.
இதனைக் கேட்டு நன்றிப் பெருக்கால் என் உள்ளம் நினைந்தது.
ஈரோடு பெரியா-ரின் குருகுலம். அண்ணா வாழ்ந்த காஞ்சியும், பெ-ரியார் வாழ்ந்தஈரோடும் எனது இரு கண்கள். இதனால் இங்கு மா-நாடு -நடத்த -முடிவு செய்தேன்.
-நாட்டின் பல்வேறு இடங்களில் சாதி மத மோதல்களை -நடத்த சதித் திட்டங்கள்தீட்டப்படுகின்றன. ஆயுதங்கள் குவிக்கப்படுகின்றன. வெடிமருந்துகள்சேமிக்கப்படுகின்றன. எனவே, தொண்டர்கள் செஞ்சிலுவை சங்கம் போல்செயல்பட்டு இத்தகைய சதித் திட்டங்களை -முறியடிக்க வேண்டுகிறேன். சாதிக்கொடுமைகள் பரவ அனுமதிக்காதீர்கள்.
50 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட அரசியல் சட்டம் அடுத்த தலை-முறையைகட்டுப்படுத்த -முடியாது. எனவே அரசியலமைப்பு சட்ட ஆய்வு அவசியமானது.இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கிறதே எனக் கவலைப் பட வேண்டாம்.அதற்குத் தான் -மூடு விழா நடத்தப்பட்டு வருகிறதே என தொண்டர்களாகிய நீங்கள்சொல்வது எனக்கு கேட்கிறது.
வெள்ளைக்காரன் தொடங்கிய ஒரு கட்சிக்கு வெள்ளைக்காரப் பெண்மணி ஒருவர்தலைமை தாங்கியுள்ள இந்த நேரத்தில் மூடு விழா -நடப்பது -நியாயம் தான்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். குழந்தைகள்கொல்லப்படுகின்றனர். தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர். ஏராளமானகொடுமைகள் நடக்கின்றன. தமிழன் நாதியற்றவனா? அதனால் தான் ஜெனீவாவில்மனித உ-ரிமைக் கமிஷனிடம் -முறையிட்டேன்.
இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் பொதுவாக செயல்பட்டநார்வே நாட்டினர் மீது புத்த மதகுருமார்கள் தூண்டுதலால், தூதரகத்தின் மீது குண்டுவீசியுள்ளனர். -நார்வே -நாட்டினர் இரண்டு தரப்பினருக்கும் பொதுவானவர்கள்.
தமிழர்களை ஒழிப்பதற்காக 30 -நாடுகளிலிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவித்துள்ளதுசிங்கள அரசு. கடைசி சிப்பாய் உள்ளவரை போராட்டம் தொடரும் என அதிபர்சந்தி-ரிகா பேசியுள்ளார். இப்படி பேசுபவர் எப்படி தமிழர்களுக்கு அதிபராக இருக்கமுடியும்?
இதனால் தான் சேர்ந்து வாழ முடியா விட்டாலும், பி-ரிந்தாவது வாழலாம் என தமிழக-முதல்வர் கருணா-நிதி செக்கோஸ்லோவாகியாவை உதாரணம் காட்டினார். இதுதவறா? ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வைகோ குரல் கொடுப்பது தவறா?
பஞ்சபாண்டவர்கள் துரியோதனனிடம் 5 கிராமங்களை கேட்டார்கள். மறுக்கப்பட்டது.5 வீடுகளைக் கேட்டனர். துரியோதனர்கள் கொடுக்க மறுத்தனர். இதனால் விளைந்ததுகுருஷேத்திர யுத்தம். யுத்தத்தில் பஞ்சபாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. அவர்கள்வென்றது போல், இன்று இலங்கையில் -நடக்கும் போ-ரில் தமிழர்கள் -நிச்சயம் வெற்றிபெறுவார்கள்.
கடலுக்கு அப்பால் எங்கள் சகோதாரர்கள் படும் அல்லலைப் பார்த்து குமுறிக்கொண்டிருக்கிறோம். இலங்கையைத் துண்டாட வேண்டும் என -நாங்கள் வாஜ்பாயைக்கேட்கவில்லை. எங்கள் வார்த்தைகளை அளந்து பேசுகிறோம். இதில் தெளிவுஇருக்கிறது. சிங்கள அரசின் இனப்படுகொலையால் இலங்கை துண்டாடப்பட்டால்,அதற்கு இந்தியா பொறுப்பல்ல.
நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். இந்த ஆட்சி 5ஆண்டுகள் நீடிக்கும். அடுத்த தேர்தலிலும் மத்தியிலும் வஜ்பாய் தலைமையிலானஅணியும், தமிழகத்தில் கருணா-நி-தி தலைமையிலான அணியும் வெற்றி பெறுவது-நிச்சயம் -எ-ன்-று வைகோ பேசினார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications