தமிழகத்தில் இன்று
இலங்கையை கூறுபோடச் சொல்லவில்லை என்-கி-றார் வைகோ
ஈரோடு:
இலங்கையைக் கூறு போடச் சொல்லவில்லை. ஏன் என்றால் நாங்கள் பொறுப்புள்ள அரசியல் கட்சி என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோதெரிவித்தார்.
ஈரோட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.) நடத்திய 2 நாள் மாநாட்டின் நிறைவாக ஞாயிற்றுக்கிழமை அவர் ஆற்றியசிறப்புரை:
பல எதிர்ப்புக்களுக்கு இடையிலும், காங்கிரஸ் கட்சியினரின் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்துக்கு இடையிலும் இம் மாநாடு வெற்றிகரமாகநடைபெற்றுள்ளது.
பரபரப்பான சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி இம் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிச் சென்றுள்ளார்.
அப்பாவி மக்களைக் காப்பாற்ற ஒரு செஞ்சிலுவைச் சங்கம் போல் மதிமுக செயல்படவேண்டும். 6 மாதத்துக்குப் பிறகு என்ன ஆதாயம் கிடைக்கும்என்று கணக்குப் போடும் சாதாரண அரசியல் கட்சி அல்ல மதிமுக. தேர்தலில் மதிமுகவுக்கு ஓட்டுப் போடுவது என்பது மக்கள் விருப்பம்.
மக்களிடம் சகோதரப்பாசம் தழைக்கட்டும். மக்கள் வசிக்கும் பகுதியில் கலகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். 1967-ல்காங்கிரஸை ஒழிக்கவேண்டும் என்று அண்ணா சொன்னார். இன்றுவரை தமிழகத்தில் காங்கிரஸ் தலையெடுக்க முடியவில்லை.
இந்தியா முழுவதும் காங்கிரஸ் இல்லாத ஆட்சி உருவாக வேண்டும். மத்தியில் காங்கிரஸ் அல்லாமல் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி 5 ஆண்டுகள்நீடிக்கவேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. எனக்குக் கிடைத்த தகவல்களையும் ஆதாரங்களையும் வைத்துத்தான் ஜெனீவாசென்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கமிஷனிடம் புகார் கொடுத்தேன்.
இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண நார்வே நாடு முன் வந்துள்ளது. ஆனால், அதற்கு எதிர்ப்பாக இலங்கையில் உள்ள அந் நாட்டுத் தூதரகம் மீதுகுண்டுவீச்சு நடந்துள்ளது. இது புத்த குருமார்களின் தூண்டுதலால் நடந்துள்ளது. தமிழர்களுக்கு எந்த உரிமையையும் வழங்கக்கூடாது என்று அவர்கள்கூறுகின்றனர். அவர்களை எதிர்த்துக் கொண்டு அதிபர் சந்திரிகாவால் எதுவும் செய்யமுடியாது.
உலகில் பிரிந்த நாடுகள் சேருகின்றன.ஒன்றாக இருந்த நாடுகள் பிரிகின்றன. இது உலக வரலாறு. இலங்கையில் தமிழ் ஈழம் உருவானால், தமிழகத்தில்தனித் தமிழ்நாடு கேட்பார்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சி கூறுகிறது.
இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அந்த நாட்டைக் கூறுபோடும்படி நாங்கள் சொல்லவில்லை. அப்படி நாங்கள் சொல்லவும் மாட்டோம். ஏன்என்றால் நாங்கள் பொறுப்புள்-ள அரசியல் கட்சி.
சிங்கள ராணுவத்துக்கு ஆயுதங்களை விற்கவேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் சொல்லும்போது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வைகோ பேசுவதுதவறில்லை. அது தேசத் துரோகமும் இல்லை.
இந்தியா சிறந்த ஜனநாயக நாடு. இந்தியாவுக்காக நான் எதையும் செய்வேன். தேசத்தின் மீது அக்கறை கொண்டவன் நான்.
இந்தியாவில் பல இடங்களில் கிறிஸ்தவர்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. இத் தாக்குதல்களுக்குப் பின்னணி உள்ளது.பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எங்கள் உள்ளத்தில் தெளிவு இருக்கிறது. வார்த்தைகளில், திட்டங்களில் தெளிவு இருக்கிறது. மதிமுகவில் வன்முறைக்கு இடம் இல்லை. நாங்கள்வன்முறையாளர்கள் அல்ல. அமைதியை விரும்புபவர்கள் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications