தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரியில் காமராஜருக்-கு மணி மண்டபம்

நாகர்கோவில்:

கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணி மண்டபத்தை முதல்வர்கருணாநிதி 15-ம் தேதி திறந்து வைக்கிறார்.

பிரதமர் வாஜ்பாயின் சிறப்பு அனுமதியின் பேரில் இந்த மணி மண்டபம்கட்டப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள காமராஜர் அஸ்தி வைக்கப்பட்டுள்ளமண்டபத்தை மணி மண்டபமாக கட்ட வேண்டும் என்று நீண்டகாலமாக கோரப்பட்டுவந்தது. இதையடுத்து அங்கு மணி மண்டபம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது.ஆனால், சட்டப்படி, கடற்கரையின் 500 மீட்டர் சுற்றளவில் கட்டடங்களும் கட்டப்படக்கூடாது என்று மத்திய அரசின் தரப்பில் கூறப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. காமராஜர் மண்டபம் கட்ட விசேஷஅனுமதி வழங்கும்படி பிரதமர் வாஜ்பாயிடம், முதல்வர் கருணாநிதி தனிப்பட்டமுறையில் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து பிரதமர் அனுமதி வழங்கினார். ரூ.55 லட்சம் செலவில் மணி மண்டபம் கட்டப்பட்டது.

மண்டபப் பணிகள் விரைவில் முடிவடைகின்றன. 15-ம் தேதி முதல்வர் கருணாநிதிதிறந்து வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+