தமிழகத்தில் இன்று
புதுவையின் காமராஜர் சண்முகம்...மூப்பனார் பாராட்டு
சென்னை:
பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் சென்னையில் செவ்வாய்க்கிழமை த.மா.கா.தலைவர் மூப்பனார் சந்தித்தார்.
ஏனாம் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளசண்முகத்திற்கு, மூப்பனார் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். பின்னர்இருவரும் சத்தியமூர்த்தி பவனில் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு இருவரும் அளித்த பேட்டி வருமாறு:
மூப்பனார் கூறுகையில், 1954ம் ஆண்டில் தனக்கு சம்பந்தமே இல்லாத குடியாத்தம்சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு காமராஜர் வெற்றி பெற்றார். அதே போல்புதுவை முதல்வர் சண்முகம் காங்கிரசுக்கு சம்பந்தமே இல்லாத ஏனாம் தொகுதியில்போட்டியிட்டு சண்முகம் வெற்றி பெற்றுள்ளார். அவரை நான் பாராட்டுகின்றேன்.
அதே போல் அவர் பாண்டிச்சேரியில் நல்லாட்சி தருவார். இந்த ஓராண்டு மட்டுமல்ல,அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்கும் அவர் நல்லாட்சி தருவார். இந்த வெற்றிதமிழ்நாட்டிலும் தொடரும். அவருக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் என்றார்.
சண்முகம் பேசுகையில், புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு மூப்பனார் வழிவகுத்தார். யார் முதல்வராக வருவது என்ற பிரச்சனை எழுந்த போது மூப்பனார்,சோனியா ஆகியோர் கலந்து பேசி என்னை பொறுப்பில் அமர்த்தினர்.
இந்த பொறுப்பை நான் திறம்பட நிறைவேற்றி வருகிறேன். நான் தேர்தலில்போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழ்நிலை வந்தபோது, தோழமைக்கட்சி உறுப்பினர்கள் பலர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்தனர்.அவர்களுக்கெல்லாம் என் நன்றி.
கடைசியாக ஏனாம் தொகுதி சுயேச்சை உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணராவ் பதவி விலகமுன் வந்ததை ஏற்று, அத் தொகுதியில் நான் போட்டியிட்டேன். ஒரு முதல்வராகஇல்லாமல் சாதரண வேட்பாளராக அரசு வாகனங்களை பயன்படுத்தாமல், நடந்தேசென்று வாக்குககள் கேட்டேன்.
ஆனால், எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக மத்தியமற்றும் மாநில அமைச்சர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர். தெலுங்கு -தமிழர்என்ற பிரச்சனையையும் கிளப்பினர். அதையெல்லாம் மீறி மக்கள் என்னை வெற்றிபெறச் செய்தனர்.
இந்த வெற்றி காங்கிரஸ், த.மா.கா, அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக்கு கிடைத்தவெற்றி, இந்த வெற்றியை பயன்படுத்தி புதுவையில் ஏழை, எளிய நடுத்தர மக்களின்வாழ்க்கை மேம்பாட்டுக்கு உழைப்பேன். தொழில் மற்றும் விவசாயத் துறைவளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன் என்றார் சண்முகம்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications