தமிழகத்தில் இன்று
இலங்கையில் பத்திரிகைகளுக்கு மீண்டும் தடை
கொழும்பு:
இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேநடந்து வரும் சண்டை தொடர்பான செய்திகளை வெளியிட பத்திரிகைகளுக்குஇலங்கை அரசு மீண்டும் தடை விதித்துள்ளது.
யாழ்ப்பாண தீபகற்பத்தில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே மே மாதம் முதல்கடும் சண்டை நடந்து வருகிறு. இச் சண்டை தொடர்பான செய்திகளை வெளியிடபத்திரிகைகளுக்கு மே 4-ம் தேதி இலங்கை அரசு தடை விதித்தது.
சண்டை தொடர்பான எச் செய்தியை வெளியிட விரும்பினாலும், அது குறித்துஇலங்கை அரசுக்கு தெரிவித்துவிட்டு அனுமதி கிடைத்தபிறகுதான் செய்தியைவெளியிடவேண்டும் என்று பத்திரிகைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
அதன்படிதான் பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டு வந்தன. இந் நிலையில்,வெளிநாட்டுப் பத்திரிகைகள் மீதான தடையை இலங்கை அரசு கடந்த மாதம் விலக்கிக்கொண்டது.
புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டை தொடர்பானசெய்திகளை பத்திரிகைகள் தங்கள் விருப்பம் போல் வெளியிட்டுக் கொள்ளலாம்என்றும், உள்நாட்டுப் பத்திரிகைகள் மீதான தடையை விலக்கிக் கொள்வது பற்றிபின்னர் அறிவிக்கப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்தது.
இந் நிலையில், சில நாட்களுக்கு முன் பத்திரிகைகள் மீதான கட்டுப்பாடுகளைக்கண்காணிக்கும் அதிகாரியாக ஆரிய ரூபசிங்கே நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்துஇலங்கை உச்சநீதிமன்றத்தில் இரு பத்திரிகைகள் வழக்குத் தொடர்ந்தன.
இவ் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ரூபசிங்கேவுக்கு அதிகப்படியான அதிகாரம்வழங்கப்பட்டுள்ளது சட்டவிரோதம் என்றும் அவரது நியமனத்தை ரத்துசெய்யவேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. ஜூலை 1-ம் தேதி இத் தீர்ப்புவழங்கப்பட்டது.
இதையடுத்து பத்திரிகைகள் மீது மீண்டும் தடை விதித்த இலங்கை அரசு,ரூபசிங்கேவை தலைமை சென்சார் அதிகாரியாக மீண்டும் நியமித்துள்ளது.
இப் புதிய அறிவிப்பின்படி, தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செய்திவெளியிடும் பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அரசுதெரிவித்துள்ளது.
மேலும், ரூபசிங்கேவுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருந்த அதிகாரங்களில் சிலதிரும்பப் பெறப்பட்டுவிட்டன. ஆனால், தடையை மீறி செய்திகளை வெளியிடும்பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்க அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications