சிங்கர் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வென்றது இலங்கை
கல்லே:
சிங்கர் கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் புதன்கிழமை நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
கல்லேயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் பேட் செய்தது. முதல் நாள் பெய்த மழையின் காரணமாக ஆட்டம் 45 ஓவர்களாகக்குறைக்கப்பட்டது.
இலங்கை அணியினரின் சிறப்பான பந்துவீச்சினால் ரன் குவிக்க பாகிஸ்தான் அணியினர் மிகவும் சிரமப்பட்டனர்.
ஒரு கட்டத்தில் 84 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தவித்தது. இந் நிலையில், இன்சமாம் உல்-ஹக் நின்று ஆடி ரன்கள் சேர்த்தார்.அவர் அசார் மெஹ்மூத்துடன் சேர்ந்து ஆடி 9-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தார். அவர் 83 ரன்கள் அடித்தார்.
இறுதியில் பாகிஸ்தான் 45 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 164ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் ஸோய்ஸா 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைவீழ்த்தினார்.
அடுத்து ஆடிய இலங்கை 37.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அட்டபட்டு 62 ரன்கள் குவித்து அணியின்வெற்றிக்கு உதவினார். அவருக்கு அடுத்தபடியாக சங்காக்கரா 35 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் அணியில் வக்கார் யூனிஸும், அப்துர் ரஸாக்கும் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சிங்கர் கோப்பையின் அடுத்த ஆட்டம் இலங்கைக்கும், தென் ஆப்பிரிக்காவும் இடையே கல்லேயில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications