பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
இன்று மனிதவெடிகுண்டு நினைவு நாள்
கொழும்பு:
இலங்கையில் புதன்கிழமை விடுதலைப் புலிகள் மனித வெடிகுண்டு நினைவு நாள்அனுசரிப்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் பல ஆண்டு காலமாக தனி ஈழம் கேட்டு விடுதலைப் புலிகள்போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் இலங்கை ராணுவத்தரப்பிலும், விடுதலைப்புலிகள் தரப்பிலும் அதிகமான உயிரிழப்பு தொடர்ந்து வருகிறது.
விடுதலைப் புலிகள் மனித வெடிகுண்டு என அழைக்கபடும் தற்கொலைப் படை மூலம்தங்களது எதிரிகளைக் கொன்று வருகின்றனர்.விடுதலைப் புலிகளின் முதல் மனிதவெடிகுண்டு 1987-ம் ஆண்டு வெடித்தது. அந்த ஆண்டு ஜுலை மாதம் 5-ம் தேதிவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் கேப்டன் மில்லர் என்ற போராளி வெடிகுண்டுகள்ஏற்றப்பட்ட லாரியுடன் சென்று, நெல்லி ராணுவ முகாம் மீது மோதினார். லாரிவெடித்துச் சிதறி ராணுவ முகாமில் இருந்த 39 வீரர்கள் உடல் சிதறி இறந்தனர்.
கொழும்பு நகரில் கடந்த ஜுன் 7-ம் தேதி நடந்த விடுதலைப் புலிகளின் மனிதவெடிகுண்டு தாக்குதலில் இலங்கையின் தொழில் மந்திரி குணரத்னே பலியானார்.
புதன் கிழமை மனித வெடிகுண்டின் 13-வது நினைவுநாள். இதை முன்னிட்டு புலிகள்மேலும் தாக்குதல் நடத்தக் கூடும் என எண்ணி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, யாழப்பாணத்தில், நாகர்கோவில் அருகே உள்ள புலிகள் முகாம் மீதுஇலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் 35 விடுதலைப் புலியினரும். 3ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் இலங்கைஅரசின் தகவல் தொடர்பு அதிகாரி சூரிய ரூபசிங்கே தெரிவித்தார்.
கொழும்புத் துறை,. கரடியன் காடு, தட்டுவன் கோட்டை ஆகிய இடங்களில் நடந்தசண்டையில் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர் என்றும் 4 இலங்கை ராணுவவீரர்கள் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications