பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
விமான நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை வரும்
சென்னை:
பிரதமரின் பாதுகாப்பு பணியில் அலட்சியம் காட்டிய சென்னை விமான நிலையபாதுகாப்பு போலீசார் 11 மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
சென்னை மற்றும் கயத்தாறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் வாஜ்பாய்செவ்வாய் கிழமை சென்னை வந்தார். பிரதமரின் வருகையை ஒட்டி சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவர்களது பாதுகாப்பு பணியின் தரத்தை அறிய சென்னை விமானப் போக்குவரத்துபாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், இத்துறையை சேர்ந்த நான்கு பேரை மாற்று வேஷத்தில்பயங்கர ஆயுதங்களுடன் அனுப்பி வைத்தனர். அவர்கள் எந்த வித பயணடிக்கெட்டும், அடையாள அட்டையும், அனுமதி உத்தரவும் இல்லாமல் பிரதான வாயில்வழியாக விமான நிலையத்திற்குள் சென்றனர்.
அதேபோல் விமானங்கள் புறப்படும் வழியாகவும் உள்ளே சென்றனர். எவ்விதசோதனையும் இன்றி பிரதமர் வந்து இறக்கும் இடம் வரை போய் விட்டு திரும்பினர்.
சந்தேகத்தின் பேரில் யாராவது விசாரிக்க மாட்டார்களா என்ற எண்ணத்தில் விமானநிலைய வளாகத்திற்குள் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தனர்.
இந்த ஒத்திகை நடைபெறும் போது போலீஸ் உயரதிகாரிகள் உள்பட பலர் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கண்ணில் படும் படியாக இந்த நான்கு பேரும்நடமாடிய போதிலும், எந்த வித விசாரணையும் இல்லை.
எனவே பாதுகாப்பு பணியில் மிகவும் அலட்சியாக இருந்த போலீஸ் அதிகாரிகள்மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவில் விமானப்போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு, டெல்லிக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
அதன்படி 2 அதிகாரிகள் உள்பட 11 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுசென்னை போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications