நாடகமாடுகிறது தி.மு.க. .. கூறுகிறார் ஜெ..
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனையும், அவரது கூட்டாளிகளையும் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ 40 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்திருப்பது தேர்தல் வருவதையொட்டி ஆடும் நாடகமாகும் என்று அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வீரப்பனைப் பற்றியும், அவரது கூட்டாளிகள் குறித்தும் தகவல்கள் கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று ஏற்கனவே அ.தி.மு.க.ஆட்சியில்அறிவிக்கப்பட்டது. தற்போது தி.மு.க.மீண்டும் இதை அறிவிப்பது தேவையில்லாத ஒன்று.
வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதில் ஏகப்பட்ட குளறுபடிகள், சிக்கல்கள் இருந்தது அனைவருக்கும் தெரியும். அதாவதுசட்டசபையில் முதல்வர் கருணாநிதி நவம்பர் 13 ம் தேதி கூறுகையில், வீரப்பன் பிடியிலிருந்து நடிகர் ராஜ்குமார் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று கூறினார்.
ஆனால் ராஜ்குமாரோ அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே விடுவிக்கப்பட்டு பண்ணை வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்தார். ராஜ்குமார் விடுவிப்புவிஷயத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி பொதுமக்களைக் குழப்பி விட்டார்.
வீரப்பனுக்கும், தீவிரவாத இயக்கங்களான டி.என்.எல்.ஏ., டி.என்.ஆர்.டி. மற்றும் டி.என்.எல்.எஃப் ஆகியவற்றுக்கும் இடையிலுள்ள தொடர்பு குறித்துதமிழக அரசு தெளிவாக எதையும் தெரிவிக்கவில்லை.
வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இதனால் பயந்த தி.மு.க மக்களை தங்கள் வழிக்குஇழுக்கும் வகையில் தேர்தல் நாடகம் நடத்தி வருகிறது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications