யோகம் பயிலுவோம்
அமெரிக்காவுக்குப் படையெடுக்கும் இங்கிலாந்து விஞ்ஞானிகள்
லண்டன்:
பிரிட்டனில் உள்ள உலகப் புகழ் பெற்ற ராயல் சொஸைட்டியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பலர் அமெரிக்காவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்காவில் தங்களுக்கு நல்ல மதிப்பும், எதிர்காலமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரிட்டனின் உயர் விஞ்ஞானிகள் அங்கு அதிக அளவில் செல்லத்தொடங்கியுள்ளனர். இத் தகவலை ராயல் சொஸைட்டி தெரிவித்துள்ளது.
புகழ்பெற்ற ராயல் சொஸைட்டியில் பணியாற்ற உலக நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விரும்புவார்கள். ஆனால், இப்போதைய நிலவரப்படி அங்குபணியாற்றுவதை விட அமெரிக்காவில் பணியாற்றவே அவர்கள் அதிகம் விரும்புகின்றனர்.
1960-ம் ஆண்டு முதல் வெளிநாட்டுக்குச் செல்லும் விஞ்ஞானிகளைப் பற்றி கணக்கெடுத்து வரும் ராயல் சொஸைட்டியின் கணக்குப்படி, கடந்த ஆண்டுமட்டும் ராயல் சொஸைட்டியில் உள்ள 1,177 விஞ்ஞானிகளில் 12.4 சதவீதம் பேர் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளனர்.
வெளிநாடுகளில் சென்று பணியாற்றும் விஞ்ஞானிகளுக்குக் கிடைக்கும் மதிப்பையும், நல்ல எதிர்காலத்தையும் கேட்டபிறகு ராயல் சொஸைட்டியில் உள்ளபெரிய விஞ்ஞானிகளும் வெளிநாடுகளுக்குச் செல்ல தொடங்கிவிட்டனர் என்றார் சொஸைட்டியின் துணைத் தலைவர் ஜான் என்டர்பை தெரிவித்தார்.
இந் நிலையில், ராயல் சொஸைட்டியின் அறிவியல் துறை வளர்ச்சிக்கு அதன் வேந்தர் ரூ. 6,600 கோடி ஒதுக்கியுள்ளார். இது புதிய விஞ்ஞானிகளை ராயல்சொஸைட்டிக்குக் கொண்டு வரும் என்றும், இருக்கும் விஞ்ஞானிகள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் தடுக்கும் என்றும் ராயல் சொஸைட்டியின் தலைவர்ஆரோன் க்ளுக் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications