தமிழகத்தில் இன்று
கோர்ட் சம்மனைத் திருப்பி அனுப்பினார் ஜெயலலிதா
சென்னை:
கலர் டி.வி. ஊழல் வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பிய சம்மனை வாங்க ஜெயலலிதா மறுத்து விட்டார்.
போலீஸ்காரர் மூலம் தனது போயஸ் தோட்ட வீட்டுக்கு சம்மன் அனுப்பப்பட்டதை ஆட்சேபித்து அதை வாங்க அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துக்களுக்கும் கலர் டிவி வழங்கப்பட்டது.
இதற்காக கலர் டி.வி.க்கள் வாங்கியதில் 10 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன், முன்னாள் அமைச்சர்செல்வகணபதி உள்பட 10 மீது தனி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகிய மூவரையும் விடுதலை செய்தது. செல்வகணபதி உள்பட 7 பேருக்கு 5ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
ஜெயலலிதா உள்ளிட்ட மூவர் விடுதலையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், சி.பி.சி.ஐ.டி. போலீஸார் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவைவிசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.
அதன்படி சிறப்பு நீதிமன்றம் மூலம் ஜெயலலிதாவுக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை நீதிமன்ற ஊழியர் மூலம் கொடுத்தனுப்பாமல்,போலீஸ்காரரிடம் கொடுத்து அனுப்பியதை ஆட்சேபித்து அதை வாங்க ஜெயலலிதா மறுத்து விட்டார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications