தமிழகத்தில் இன்று
எங்களுக்கும் தேவை சங்கம்...கோர்ட்டில் போலீஸ்காரர் வழக்கு
சென்னை:
தமிழகத்தில் போலீஸ் சங்கம் அமைக்க அனுமதி கோரி போலீஸ்காரர் ஒருவர் தாக்கல் செய்த வழக்குத் தொடர்பாக, தமிழக அரசுக்கு சென்னைஉயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
செங்கை கிழக்கு மாவட்ட போலீஸ் சரகத்தில் உள்ள சேலையூர் காவல் நிலையத்தில் பணிபுரிபவர் போலீஸ்காரரர் மணிவண்ணன்.
போலீஸ் சங்கம் அமைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனு விவரம்:
மாநில நிர்வாகத்துக்கு உதவி புரிவதில் போலீஸ் படை முக்கிய பங்காற்றுகிறது. அமைதியாகவும், கீழ்ப்படியும் தன்மையுடனும், விசுவாசத்துடனும்பணிபுரியும் எங்களுக்கு பிரச்னைகள் வரும்போது போராடுவதற்கு அமைப்புகள் இல்லை.
போலீஸார் தங்களது பிரச்னைகளை விவாதித்துக் கொள்ளக் கூட அனுமதிப்பதில்லை. ஜனநாயக நாட்டில் ஒரு அங்கமாக இருந்தாலும் எங்கள் உணர்வுகளைவெளிப்படையாகக் கூற முடியவில்லை.
அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் உயர் அதிகாரிகளால் என்னைப் போன்ற போலீஸ்காரர்கள் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸார் சங்கம் அமைப்பது தொடர்பாக தேசிய போலீஸ் ஆணையம் விரிவாக ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
போலீஸாருக்கு அமைப்பு ரீதியான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம்போன்ற மாநிலங்களில் போலீஸ் சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும், அகில இந்திய அளவில் சங்கத்தினை துவக்கியுள்ளனர்.
தமிழகத்தில் போலீஸசாருக்கு இழைக்கப்படும் பல்வேறு கொடுமைகளை சுட்டிக் காட்டி சங்கம் அமைக்க அனுமதி தருமாறு தமிழக அரசிடம் மனுசெய்தேன். அரசு அனுமதி மறுத்து விட்டது.
ஆகவே, எனது இந்த கோரிக்கை மனுவை ஏற்று அனுமதி வழங்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தனதுமனுவில் மணிவண்ணன் கூறியுள்ளார்.
இம் மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி கோவிந்தராஜன், இதுகுறித்து பதில் தருமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications