தமிழகத்தில் இன்று
புலிகள் சாவு குறித்து விசாரிக்க நிபுணர் குழு அமைப்பு
டெல்லி:
ஒரிசா மாநிலம் புவனேஸ்வர் நகரிலுள்ள நந்தன் கினான் புலிகள் சரணாலயத்தில் 10 வங்கப் புலிகள் இறந்தது குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவைமத்திய அரசு அமைத்துள்ளது.
மத்திய விலங்கியல் பூஙகா ஆணைய செயலாளர் பி.ஆர்.சின்ஹா தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. புலிகள் இறப்பிற்குக் காரணமான நோய்குறித்தும், பூங்காவில் தற்போதுள்ள புலிகளின் நிலை குறித்தும் இந்தக் குழு கண்டறியும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கை குறித்தும் இக்குழு அரசுக்குப் பரிந்துரைக்கும்.
நிபுணர் குழுவில், விலங்கியல் நிபுணர் புஷ்பா குமார் (ஹைதராபாத்), எஸ்.கே.பட்நாயக் (ஒரிஸ்ஸா), டாக்டர் ராம்குமார், டாக்டர் சக்ரவர்த்தி (கர்நாடகா),டாக்டர் மனோகரன் (சென்னை) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவுடன், ஒரிஸ்ஸா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பேச்சு நடத்திய பிறகு இந்தக் குழுவைமத்திய அரசு அமைத்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications