யோகம் பயிலுவோம்
காதலித்து ஏமாற்றியதாக ஒளிப்பதிவாளர் மீது வடிவுக்கரசி புகார்
சென்னை:
என்னை ஏமாற்றிய ஒளிப்பதிவாளரிடமிருந்து ஐந்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வாங்கித்தர வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகை வடிவுக்கரசி புகார்கொடுத்துள்ளார்.
தற்போது அம்மா வேடங்களில் தமிழ் சினிமாவில் அசத்திக் கொண்டிருக்கும் நடிகைவடிவுக்கரசி, அந்தக்கால கதாநாயகி. இப்போது அவருக்கும் ஒளிப்பதிவாளர்ஒருவருக்கும் காதல். அந்த காதல் கை கூடவில்லை என்றும், வேறு ஒரு பெண்ணைதிருமணம் செய்து கொள்ள காதலன் முயற்சிப்பதாகவும் வடிவுக்கரசி போலீஸ்கமிஷனரிடம் கொடுத்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
வியாழக் கிழமை சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குவந்தார் வடிவுக்கரசி. கமிஷனர் காளிமுத்துவை சந்தித்து புகார் மனு ஒன்றைக்கொடுத்தார். புகாரை படித்த கமிஷனர், அதை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குஅனுப்பி வைப்பதாகவும், அங்கு செல்லும்படியும் கூறினார்.
அதன்படி ஆயிரம் விளக்கில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குவடிவுக்கரசி சென்றார். அங்கு அவரிடம் போலீஸ் உதவி கமிஷனர் ஜெயகவுகிவிசாரணை நடத்தினார். அப்போது வடிவுக்கரசி கூறுகையில், எனக்கும் அந்தஒளிப்பதிவாளருக்கும் தொடர்பு இருந்தது. என்னை திருமணம் செய்து கொள்வார்என்ற நம்பிக்கையில் நகைகளை எல்லாம் விற்று அவருக்கு 2 லட்ச ரூபாய்கொடுத்தேன்.
இப்போது என்னை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளஅவர் திட்டமிட்டுள்ளார். எனவே அவரிடம் இருந்து எனக்கு 5 லட்ச ரூபாய் பெற்றுத்தர வேண்டும் என்று கூறினார்.
வடிவுக்கரசியின் புகார் தொடர்பாக ஒளிப்பதிவாளரை அழைத்து விசாரிக்க போலீசார்முடிவு செய்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications