தமிழகத்தில் இன்று
அமைதியாக நடந்த நடிகர் சங்கத் தேர்தல்
சென்னை:
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர்கள் கமல்ஹாசன்,ரஜினிகாந்த், விஜய், அஜீத் ஆகியோர் உள்பட பல நடிக, நடிகையர் வாக்களித்தனர்.
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 5 மணி வரைக்கும் இது நீடிக்கும். அதன் பின்னர்வாக்குகள் எண்ணப்பட்ட முடிவுகள் இரவில் அறிவிக்கப்படும்.
அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்குவிஜயகாந்த்தும், செயலாளர் பதவிக்கு சரத் குமாரும் ஏற்கனவே போட்டியின்றித்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பொருளாளர், 2 துணைத் தலைவர்கள், 24 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு இப்போது தேர்தல்நடக்கிறது. விஜயகாந்த் அணி சார்பில் பொருளாளர் பதவிக்கு நாடக நடிகர் காளையும், துணைத் தலைவர்பதவிக்க எஸ்.எஸ்.சந்திரன், தமிழ்ச் செல்வி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு நடிகர்கள் அலைகள் செல்வக்குமார், நாசர், நெப்போலியன்,பார்த்திபன், ராதாரவி, வி.கே.ராமசாமி, செந்தில், ஆர்.சுந்தர்ராஜன், சத்யராஜ், அர்ஜூன், முரளி,எம்.ராஜேந்திரன், ஏ.கே.ராஜேந்திரன், டி.எஸ்.ராஜா, தங்கராஜ், வீரமணி கண்ணன், நடிகைகள்மனோரமா, பசி சத்யா, ரேவதி, குஷ்பு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்களை எதிர்த்து தனி அணியாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் சிலர் போட்டியிடுகின்றனர்.பொருளாளர் பதவிக்கு இயக்குநர் விசு, செயற்குழு உறுப்பினர் பதவிக்கு எஸ்.வி.சேகரும்போட்டியிடுகின்றனர்.
காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படிருந்தது.விஜயகாந்த், சரத் குமார் முதலில் வாக்களித்தனர். தொடர்ந்து நடிகர், நடிகைகள் வாக்களித்தனர்.
ரஜினிகாந்த், கமல், பிரபு, கார்த்திக், முரளி, அர்ஜூன், பார்த்திபன், அஜீத், விஜய், சூர்யா, பிரபுதேவா,மாதவன், அப்பாஸ், செந்தில், சால்ரி, வடிவேலு, விகே.ராமசாமி, வெண்ணிறை ஆடை மூர்த்தி,சிவக்குமார், ரவிச்சந்திரன், ராஜேஷ் போன்றோர் வாக்களித்தனர்.
நடிகைகளில், குஷ்பு, ரேவதி, ராதிகா, மனோரமா, வடிவுக்கரசி, மீனா, ஜோதிகா, மந்த்ரா,கோவை சரளா, சச்சு, ஜோதிமீனா போன்றோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
நடிகர் சங்க மொத்த உறுப்பினர்கள் 1859 பேர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வாக்களிக்கவருவதில்லை. ஆனால் இம்முறை விஜயகாந்த் தலைவராக இருப்பதால் ரஜினி, கமல் போன்றபிரபலங்கள் கூட வந்து வாக்களித்தனர். விஜயகாந்த் தலைமையை எதிர்க்க எந்த நடிகரும்முன்வராததால், தேர்தல் மிக அமைதியாக நடந்தது.
கடந்த தேர்தலில் ராதாரவியை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் களமிறக்கப்பட்ட நடிகர் விஜயக்குமார்இந்தத் தேர்தலை புறக்கணித்தார். அவரது குடும்பத்தினரும் வாக்களிக்க வரவில்லை.
முன்னாள் தலைவர் சிவாஜி கணேசனும், உடல் நிலை காரணமாக வாக்களிக்கவில்லை. இதுகுறித்துவிஜயகாந்த் தெரிவிக்கையில், எங்களுடைய வெற்றி விழாவில் சிவாஜி நிச்சயம் கலந்து கொள்வார்என்று நம்பிக்கை தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications