தமிழகத்தில் இன்று
கட்டாய தமிழ்க் கல்வி...உச்சநீதிமன்றம் செல்கிறது தமிழக அரசு
சென்னை:
தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டாய தமிழ் பயிற்று மொழி தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததைஎதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகள் வரை தமிழ் அல்லது தாய்மொழியை கட்டாய பயிற்று மொழியாக கொண்டு கற்பிக்கவேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஆங்கிலப் பள்ளிகளின் சங்கங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வெங்கடாசலமூர்த்தி, ஜெகதீசன், தினகர் ஆகியோர் அடங்கிய "முழு பெஞ்ச் கட்டாய தமிழ் பயிற்று மொழி உத்தரவை ரத்து செய்தது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்பீல் செய்வதற்கானஆவணங்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கோடை விடுமுறை முடிந்து உச்ச நீதிமன்றத்தில் அன்றாட பணிகள் தொடங்கி விட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக அரசு சார்பில் விசேஷ அனுமதி மனு(எஸ்.எல்.பி) தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையில், தங்களிடம் விளக்கம் கோராமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என கோரி சில சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில்"கேவியட் மனு தாக்கல் செய்துள்ளன. எனவே அரசு தாக்கல் செய்யும் அப்பீல் மனு மீதான விசாரணையின் போது, ஆங்கிலப் பள்ளிக் சங்கத்தின் சார்பில்விளக்கம் கோரப்படும்.
உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனு விசாரணைக்கு வரும்போது மேற்கொள்ள வேண்டிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து சென்னையை சேர்ந்த பிரபலவக்கீல்களுடன் தமிழ்நாடு நர்சரி மற்றும் தொடக்க, மேல்நிலைப் பள்ளிகள் நிர்வாக சங்கத்தினர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications