தமிழகத்தில் இன்று
புகழைக் கெடுக்க சதி...நடிகை காவேரி நீதிமன்றத்தில் மனு
சென்னை:
தனது பெயரையும, புகழையும் கெடுக்க சிலர் சதி செய்வதாக டி.வி. தொடர்களில் நடித்து வரும் நடிகை காவேரிநீதிமன்றத்தில் புகார் செய்துள்ளார்.
பல்வேறு டி.வி. தொடர்களில் நடித்து வருபவர் நடிகை காவேரி. வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில்அறிமுகமானவர். இவர் தற்போது நடித்து வரும் துளசி தொடருக்கான படப்பிடிப்பின்போது,கதாநாயகனுக்கும், காவேரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கதாநாயகனின்கன்னத்தில் காவேரி அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தொடர் இயக்குநர் தரப்பில்போலீஸில் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் காவேரி தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில்கூறப்பட்டிருப்பதாவது:
நான் துளசி என்ற தொடரில் நடித்து வருகிறேன். இதன் கதாநாயகன் வெற்றி. அடிக்கடி இவர் என்னைத்திருமணம் செய்து கொள்ளுமாறு படப்பிடிப்பு நேரங்களில் வற்புறுத்தி வந்தார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். சொந்தக்காரரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறிவிட்டேன்.
இதனால் ஆத்திரமடைந்த அவரும், இயக்குநரும் சேர்ந்து எனக்கு எதிராக செயல்படத் துவங்கினர்.எனக்கு வேறு தொடர்களின் படப்பிடிப்பு இருக்கும் சமயமாக பார்த்து துளசி படப்பிடிப்பை வைத்தனர். அதுமட்டுமல்லாது, நான் வெற்றியைத் திட்டியதாகவும், கன்னத்தில் அடித்ததாகவும் கூறி போலிஸில்பொய்ப் புகார் பதிவு செய்துள்ளனர்.
நான் டி.வி. தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருப்பதால் எனது பெயரைக் கெடுக்கும்நோக்கத்துடன் இந்தப் புகாரை அவர்கள் கொடுத்துள்ளனர். அவர்கள் சம்பவம் நடந்ததாகக்கூறியிருக்கும் நேரத்தில் நான் பிங்கி ஹவுஸ் என்ற தொடரின் படப்பிடிப்பில் இருந்தேன். இதற்கான ஆதாரமும்என்னிடம் உள்ளது.
நான் பல தொடர்களில் நடிப்பதாலும், படப்பிடிப்பிற்காக வெளியூர் செல்ல வேண்டியிருப்பதாலும் வழக்குவிசாரணையில் நேரடியாக ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற காவேரி கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அக்பர் பாஷா காத்ரி, மனுவுக்குப் பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications