தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

நிபந்தனையின்றி பேச்சுவார்த்தைக்குத் தயார் என்கிறார் சந்திரிகா

கொழும்பு:

அரசியல் சட்டதிருத்தம் குறித்து நிபந்தனையின்றி விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றுஇலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அறிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான வட, கிழக்கு மாகாணங்களை இணைத்து இடைக்காலகவுன்சில் அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் சந்திரிகாவுக்கும், எதிர்கட்சித் தலைவர்ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே கையெழுத்தானது.

இதையடுத்து தலைநகர் கொழும்புவில் தமிழர் கட்சிகளுடன் அதிபர் சந்திரிகா பேச்சுவார்த்தையைத் துவக்கினார்.முதலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக் கட்சிப் பிரதிநிதிகளுடன் பேச்சு மேற்கொண்டார். இந்தஒப்பந்தத்தை நிராகரிப்பதாக அவர்கள் அறிவித்தனர்.

இதற்கிடையே அரசியல் சட்ட திருத்தம் தொடர்பான நகல் திட்டத்தை விடுதலைப்புலிகளின் பரிசீலனைக்குஅனுப்பி வைக்கவும், அவர்களுடன் சமரசப் பேச்சுவார்ததை நடத்தவும் தயாராக இருப்பதாக சந்திரிகா அறிவித்துஇருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலைப்புலிகளுடன் எந்த நிபந்தனையுமின்றி சமரசப் பேச்சுவார்த்தை நடத்தஅரசின் கதவுகள் திறந்து இருக்கின்றன.

இலங்கை வரலாற்றிலேயே முதல்முறையாக இனப் பிரச்சினை விஷயத்தில், 14 கட்சிகள் ஒருமித்த கருத்தைஎட்டியிருக்கின்றன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+