தமிழகத்தில் இன்று
"ஓடிப்போன மனைவிகளும்...கலைந்து போன கனவுகளும்"
சிதம்பரம்:
முதல் மனைவி ஓடிவிட, தாலி கட்டிய மறு நிமிடமே இரண்டாவது மனைவியும் காதலனுடன் தலைமறைவாகி விட இனி யாரு பொண்ணு தருவா என்றுசோகத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறார் சிதம்பரம் வாலிபர் ஒருவர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள பரத்தூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். திருமணமான சில மாதங்களில் இவரது முதல் மனைவி இவரைவிட்டுஓடி விட்டார்.
இதனால் கவலையில் ஆழ்ந்திருந்த அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க இவரது பெற்றோர்கள் முடிவுசெய்தனர். அதன்படி இவருக்கும்,சக்திவிளாகத்தைச் சேர்ந்த சுதா என்ற பெண்ணுக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்ததும் மணமக்கள் மறுவீட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். புதுமாப்பிள்ளை ராமச்சந்திரன் திருமணக் களைப்பில் சோர்வாக இருந்தார்.உறவினர்கள் அனைவரும் திருமண நிகழ்ச்சிகள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் புதுப் பெண் சுதாவைக் காணவில்லை என செய்தி பரவியது.வீட்டிலுள்ள அனைவரும் அதிர்ச்சியடைந்து வீடு முழுவதும் சோதனையிட்டனர்.
சுதாவை ஒரு இடத்திலும் காணவில்லை. உடனடியாகப் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் சுதாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்தஆனந்தராஜ் என்ற வாலிபருக்கும் காதல் இருந்ததாகவும், சுதா அவருடன்தான் வீட்டைவிட்டு ஓடியிருக்க வேண்டும் என்றும் தெரிய வந்தது.ஆனந்தராஜையும், சுதாவையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே முதல் மனைவியால் கைவிடப்பட்டு, இரண்டாவது மனைவியும் காதலனுடன் ஓட்டமெடுத்த நிலையில் இனிமேல் எனக்கு யார் பெண்கொடுப்பார்கள் என்ற விடை தெரியாத வினாவுடன், கேள்விக்குரியாகி நிற்கிறார் ாமச்சந்திரன்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications