தமிழகத்தில் இன்று
பலூன் விட்டு காமராஜர் பிறந்தநாள் கொண்டாடிய காங்கிரஸ்
சென்னை:
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது என்று தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் சென்னையில் ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்ச்சிநடைபெற்றது. இதில் இளங்கோவன் பலூனை பறக்க விட்ட சிறிது நேரத்தில், பலூன் பஞ்சர் ஆனது. காற்றுவேகமாக வெளியேறியதை அடுத்து, பறக்கவிடப்பட்ட பலூன் உடனடியாக தரையிறக்கப்பட்டது. பிறகு சரிசெய்யப்பட்ட பின்னர் மீண்டும் காற்றை அடைத்து பலூனை வானில் பறக்கவிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் இளங்கோவன் பேசியதாவது:
நாங்கள் பலூன் பறக்க விடுவது சிலருக்கு வேடிக்கையாக இருக்கும். காங்கிரஸ்காரர்கள் பலூன் பறக்கவிடுகிறார்கள் என்று நினைப்பார்கள்.
தமிழகமெங்கும் காங்கிரஸ்காரர்கள் மத்தியில் ஒரே கருத்து தான் நிலவி வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி,ஆட்சியை கைபற்ற வேண்டும் என்பது தான் அந்த கருத்து.
கோட்டையில் காங்கிரஸ் கொடி பறக்க விடப்பட வேண்டும் என்பதற்கு முன்னோடியாக தான் இங்கே பலூன்பறக்க விடப்படுகிறது. இந்த தேர்தலில் இல்லாவிட்டாலும் அடுத்த முறையாவது காங்கிரஸ் கட்சி, ஆட்சியைக்கைப்பற்றும். காங்கிரஸ் பிரகாசமான வெளிச்சத்தை நோக்கிப் போய் கொண்டிருக்கிறது.
நம்முடைய மடியில் கனம் இல்லை. வழியில் பயம் இல்லை. அதனால் யாருக்கும் நாம் பயப்படத் தேவையில்லை.
இந்த தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றாக வேண்டும். அடுத்த மாதம் 5ம் தேதி சோனியா கோவைவருகிறார். அந்த விழாவில் இளைஞர்கள் திரளாக பங்கேற்று தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்என்றார் இளங்கோவன்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications