தமிழகத்தில் இன்று
சர்ச் குண்டுவெடிப்புகளுக்கு ஒரே குழுவே காரணம்?
டெல்லி:
கர்நாடகம், ஆந்திரம் மற்றும் கோவா மாநிலங்களில் சமீபத்தில் சர்ச்களில் நடந்தகுண்டுவெடிப்புகளில் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றுமத்திய உள்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதுதம் கிறிஸ்தவர்கள் மற்றும கிறிஸ்தவ நிறுவனங்கள் கடந்த ஆண்டுதாக்குதல் நடந்தது. இது ஓய்ந்துள்ள நிலையில், சர்ச்களில் குண்டுவெடிப்புகள் நடந்துவருகின்றன. குறிப்பாக கர்நாடகம், ஆந்திரம், கோவா ஆகிய மாநிலங்களில் கடந்தஒரு மாதத்தில், நான்கு சர்ச்களில் குண்டு வெடித்துள்ளன.
இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூறுகையில், மூன்றுமாநிலங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து நடந்த முதல் கட்ட விசாரணையில்ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள்தான் இதற்குப் பின்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
கர்நாடகத்தில், ஹூப்ளி மற்றும் பெங்களூரில் சர்ச்களில் நடந்த குண்டுவெடிப்புச்சம்பவங்கள் தொடர்பாக விசாரித்து வரும் கர்நாடக போலீஸாருக்கு சில உறுதியானதகவல்கள் கிடைத்துள்ளன. கோவா மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளிலிருந்துசெய்யப்பட்ட போன்கள் குறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த இரு மாநில சர்ச்களிலும் நடந்த குண்டுவெடிப்புகளும் ஒரே மாதிரியாக உள்ளன.இருப்பினும் இதற்குக் காரணமான நபர்கள் அல்லது குழு குறித்துத் தெளிவாகத்தெரியவில்லை. இந்தக் குழுவுக்கும்,அரசியல் கட்சிகள் அல்லது வேறுஇயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தெரியவில்லை என்றார் அவர்.
கடந்த மாதம் ஒரே நாளில் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த நான்கு சர்ச்களில்(ஆந்திராவில் 2, கர்நாடகம், கோவாவில் தலா ஒன்று)
ஒரே நேரத்தில் குண்டுகள் வெடித்தன. இவற்றில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை.சனிக்கிழமை ஹூப்ளியிலுள்ள செயின்ட் ஜான் லூத்தரன் சர்ச்சில் குண்டு வெடித்தது.அதற்கு அடுத்த நாள் பெங்களூரில் ஒரு சர்ச் அருகே குண்டு வெடித்தது.
குண்டுவெடிப்பு குறித்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கருத்துத்தெரிவிக்கையில், எனது அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த சதி நடக்கிறது. அதன் ஒருகட்டம்தான் இந்த குண்டுவெடிப்புகள் என்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கூறுகையில், இந்திய விரோத சக்திகள் இந்தசம்பவங்ளுக்குப் பின் இருப்பதாக சந்தேகிக்கிறோம். சமூகத்தில் குழப்பம் விளைவிக்கஇவர்கள் நினைக்கிறார்கள். நாட்டுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்துவதே இவர்களின்திட்டம். குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார்.
இந்த குண்டுவெடிப்புகள் குறித்து மத்திய புலனாய்வுத் துறையும் கூர்ந்து கவனித்து வருவதாக அத்வானி கூறினார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications