தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

குப்பைமேட்டுச் சரிவில் சிக்கி 60 பேர் சாவு

மணிலா:

மணிலாவில் ராட்சச குப்பைமேடு சரிந்து விழுந்ததில் 60 பேர் இறந்தனர். இறந்தவர்களில் 56 பேரின் சடலங்கள்மீட்கப்பட்டுள்ளன.

மணிலால் லூசான் தீவு பகுதியில் ராட்சசக் குப்பைமேடு சரிந்து விழுந்தது. அந்தப் பகுதியில், பெய்து வரும் தொடர்மழையினால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் இந்தக் குப்பை மேடு சரிந்து விழுந்தது என்று போலீசார்தெரிவித்தனர்.

இதே பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன் பெய்த மழையில் 44 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்என்பது குறிப்பிடத்தக்கது.

லூசான் தீவில் உள்ள லூபாங் பேங்கேகோ பகுதியில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிசைவாசிகள் வாழ்ந்துவருகின்றனர். இந்தப் பகுதியில் உபயோகப்படுத்திய பிளாஸ்டிக் கன்டெய்னர்கள், உடைந்த பாட்டில்கள்,பொம்மைகள் போன்றவற்றை கொட்டும் இடம் உள்ளது. இந்தக் குப்பை மேட்டிலிருந்து நல்ல பொருட்களைசேகரிப்பது இந்தக் குடிசைவாசிகளின் வழக்கம். இதுபோன்று பொறுக்கிக் கொண்டிருக்கும்போதுதான்குப்பைமேடு சரிந்து 60 பேர் இறந்துள்ளனர்.

இதுகுறித்து செஞ்சிலுவைச் சங்க செய்தித்தொடர்பாளர் லிசா துபோங்பானுவா கூறுகையில், இந்த குப்பைமேடுசரிந்து விழுந்ததில் 60 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம். இன்னும் பலர் காணாமல் போயுள்ளனர்.அவர்களைப் பற்றி எந்த விபரமும் தெரியவில்லை என்றார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+