தமிழகத்தில் இன்று
குமரி வள்ளுவர் சிலைக்கு ஆகஸ்ட் முதல் படகு வசதி
சென்னை:
கன்னியாகுமரி கடலில் அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயரமுள்ள வள்ளுவர் சிலையை அடுத்த மாதம் முதல்பொதுமக்கள் படகுகளில் சென்று பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் முல்லைவேந்தன் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை முதல்வர் கருணாநிதி புத்தாயிரம்ஆண்டின் முதல் நாளன்று திறந்து வைத்தார்.
சிலை திறப்பு விழா அமைந்த போதிலும் சிலையைச் சுற்றி மண்டபம் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.சுற்றுலாப்பயணிகளை சிலை அமைந்திருக்கும் பாறைக்கு அழைத்து வருவது குறித்து ஆராயப்பட்டு வந்தது. 38அடி உயரத்தில் இதுவரை 31 அடி உயரம் வரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள் சிலையைச் சுற்றி மண்டபம் அமைக்கும் பணி நிறைவடைந்து விடும். அடுத்த மாதம்கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டு வரும் காமராஜர் மணி மண்டப திறப்பு விழா நடைபெற உள்ளது.
அன்றைய தினமே திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காகப்படகுகள் விடப்படும் என்று அமைச்சர் முல்லைவேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications