தமிழகத்தில் இன்று
விலங்குகளைக் காக்க கூடுகிறார்கள் கால்நடை மருத்துவர்கள்
சென்னை:
ஒரிசா மாநிலம் நந்தன்கனான் உயிரியல் பூங்காவில் புலிகள் இறந்த சம்பவத்தைஅடுத்து நாட்டில் உள்ள உயிரியல் பூங்காக்களின் உயரதிகாரிகள் மற்றும் கால்நடைமருத்துவ நிபுணர்களின் கூட்டம் சென்னையில் வரும் 19ம் தேதி தொடங்கி இரண்டுநாட்கள் நடைபெறுகிறது.
ஒரிஸா மாநிலம் நந்தன்கானன் உயிரியல் பூங்காவில் 12 புலிகள் திடீரென்று இறந்தன.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி நாடு முழுவதும் பெரும்விவாதமே நடந்து வருகிறது.
இந்நிலையில் புலிகள் சாவு பற்றி விவாதிக்கவும், மற்ற விலங்குகளின் பாதுகாப்புஉள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கவும், நாட்டில் உள்ள அனைத்துஉயிரியல் பூங்காக்களின் இயக்குனர்கள், இப்பூங்காக்களின் கால்நடை மருத்துவநிபுணர்கள் மற்றும் பராமரிப்பு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டத்தைசென்னையில் கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications