தமிழகத்தில் இன்று
பிரிவினைவாதத்திற்கு அதிமுக உடன்படாது என்கிறார் ஜெ.
சென்னை:
நாட்டில் பிரிவினைவாதத்திற்கு என்றுமே அதிமுக உடன்படாதுஎன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
மூட்டு வலிக்கு சிகிச்சை பெறுவதற்காகவும், ஓய்வெடுப்பதற்காகவும் தோழி சசிகலாவுடன் ஹைதராபாத்சென்றுள்ளார் ஜெயலலிதா.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் ஒரு திராட்சைத் தோட்டம்,அதன் நடுவில் ஒரு பிரமாண்ட பங்களாவும் உள்ளது. அடிக்கடி ஹைதராபாத் வந்து திராட்சைத் தோட்டத்தில்ஓய்வெடுப்பதை ஜெயலலிதா வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.
அமைதியான சூழலில் அவர் அங்கு தங்கி மருத்துவ சிகிச்சையும் எடுத்துக் கொள்வதுண்டு. கடந்த முறை அவர்மூட்டு வலியால் பாதிக்கப்பட்டபோது இந்த திராட்சைத் தோட்டத்தில் தான் ஒரு மாதத்திற்கும் மேல் தங்கி சிகிச்சைபெற்றுத் திரும்பினார்.
தற்போதும் ஒரு மாத காலம் ஓய்வெடுக்கும் திட்டத்தோடு அவர் ஹைதராபாத் சென்றுள்ளார். சென்னையில்இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 6.45 மணி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர் ஹைதராபாத் சென்றார்.தோழி சசிகலாவும் உடன் சென்றார்.
கடந்த இரு மாதங்களாக ஜெயலலிதாவும், சசிகலாவும் தனி நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் ஊழல் வழக்குகள்விசாரணையை சந்தித்து வந்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் தாம் நீதிமன்றத்தில் ஆஜராகிவருவதாக அவர் தனி நீதிமன்ற விசாரணையின் போது தெரிவித்தார்.
தனது ஐதராபாத் பயணத்தை அவர் ன் கூட்டியே திட்டமிட்டிருந்ததால், அதற்கேற்ப வழக்கு விசாரணைகளையும்வேக வேகமாக சந்தித்தார் ஜெயலலிதா. கட்சி நிகழ்ச்சிகளையும் முடித்தார். பிறந்த நாள் கொண்டாடும்காளிமுத்துவை கூட முன் கூட்டியே வாழ்த்தி "டாடா சுமோ கார் ஒன்றையும் பரிசளித்து விட்டார். காளிமுத்துவுக்குவரும் 14ம் தேதி தான் பிறந்த நாளே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் ஜெயலலிதா அளித்த பேட்டியில், ஜம்மு காஷ்மீர்சட்டமன்றத்தில் சுயாட்சி கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபற்றி நான் விளக்கமாக அறிக்கைவெளியிட்டுள்ளேன். இந்த விஷயத்தில் ஜனாதிபதி, மத்திய அரசுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கட்சிகளுக்கும் தகுந்த அறிவுரைகைளை வழங்க வேண்டும்.
மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என்பதை அதிமுக வலியுறுத்துகிறது. ஆனால், தனி நாடுகோரிக்கையை என்றுமே வலியுறுத்தாது. நாட்டின் பிரிவினைவாதத்திற்கு என்றும் உடன்படாது என்றார்.
பிரிவினைவாதத்தை பாமகவும் வலியுறுத்துகிறதே என்றபோது, அதற்கும் நான் அறிக்கை வெளியிட்டிருக்கிறேன்என்று பதில் சொல்லி விட்டு புறப்பட்டார் ஜெயலலிதா.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications