தமிழகத்தில் இன்று
அகதியைக் கற்பழித்துக் கொலை செய்த 3 மீனவர்கள் கைது
ராமநாதபுரம்:
இலங்கையிலிருந்து அகதியாகத் தப்பித்து வந்த பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்த மூன்று மீனவர்களைப்போலீசார் கைது செய்தனர்.
இலங்கையில் கடும் போர் நடந்து கொண்டிருப்பதால் அங்கு வாழும் மக்கள் அகதிகளாக படகு மூலம்தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.
இலங்கை மீனவர்கள் அவர்களை நடுக்கடலில் உள்ள மணல் திட்டுப் பகுதியில் இறக்கி விடுகின்றனர். அவர்களைதமிழக மீனவர்கள் படகு மூலம் கொண்டு வந்து ராமேஸ்வரத்தில் விடுகின்றனர்.
இதேபோல கடந்த வாரம் வியாழக்கிழமை 16 அகதிகளை தமிழக மீனவர்கள் நடுக்கடலில் உள்ளமணல்திட்டிலிருந்து மீட்டு ராமேஸ்வரத்தில் இறக்கி விட்டனர். இவர்களில் பத்மராஜ் என்பவரின் மனைவி குமுதினிஎன்ற பெண்ணை மட்டும் அவர்கள் கடத்திக் கொண்டு சென்றனர். இதுகுறித்து மீண்டு வந்த அகதிகள் போலீசில்புகார் கொடுத்தனர்.
விசாரணையில் அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வந்தது. இதையடுத்துகுற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்போலீஸ் படை அமைக்கப்பட்டது.
தனிப்போலீஸ் படையினர் விசாரணை நடத்தி படகு உரிமையாளர் கண்ணனைக் கைது செய்தனர். பின்னர்அவரிடம் விசாரித்ததில் இச்சம்பவத்தில் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்துவேல்முருகன், ரங்கசாமி, விஜயகுமார் என்ற அந்த மூன்று பேரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் புதன்கிழமை இரவு மீண்டும் 27 அகதிகள் தமிழகம் வந்துள்ளனர்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications