தமிழகத்தில் இன்று
"டான்சி நிலத்தை ஜெ.வுக்கு விற்பதை ஆட்சேபிக்கவில்லை
சென்னை:
டான்சி நில த்தை ஜெயலலிதாவுக்கு விற்பதையோ, அதற்கான விலை மதிப்பையோநான் ஆட்சேபிக்கவில்லை என்று அப்போது நிதித் துறை செயலாளராக இருந்தநாராயணன் இப்போது சாட்சியம் அளித்தார்.
அ.தி.மு.க. ஆட்சியில் அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை, அப்போதையமுதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் பங்குதாரர்களாக உள்ள ஜெயாபப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.
அரசு நிர்ணயித்த வழிகாட்டு மதிப்பை விட குறைவாக இந்த நிலம் ஜெயாபப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதால், அரசுக்கு கோடிக் கணக்கில் இழப்புஏற்பட்டுள்ளதாக தி.மு,க. ஆட்சியில் வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கு தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வியாழக் கிழமைநடைபெற்ற விசாரணையின்போது நாராயணன் சாட்சியம் அளித்தார்.
அ.தி.மு.க. ஆட்சியின் போது நிதித் துறைச் செயலாளராக இருந்தவர் இவர். இப்போதுதமிழ்நாடு செய்தித் தாள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராகஇருக்கிறார்.
அவர் தனது சாட்சியத்தில், டான்சி நிலத்தை விற்பனை செய்வது என்றும், அதற்கானதோராய மதிப்பு 1.5 கோடி என்றும் 14.10.1991ல் நடந்த மறுஆய்வுக் கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு டான்சி நிறுவனம் எடுத்த முடிவு தான்.
இந்த விற்பனை தொடர்பாக நான் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.அதேபோல் கிரயத் தொகை பற்றியும் நான் ஆட்சேபனை சொல்லவில்லை.
இதுதொடர்பாக போலீசார் என்னிடம் வாக்குமூலம் அளிக்குமாறு கோரவில்லை.நானே நீதிமன்றத்தில் ஆஜராகி தெரிந்த விவரங்களை சொல்ல வேண்டும் என்றநோக்கத்தில் வாக்குமூலம் அளித்தேன்.
டான்சி மற்றும் நிலக்கரி ஊழல் வழக்குகளில் என்னை சேர்த்திருந்தாலும், அதுதொடர்பாக என்னை கைது செய்யவோ, தற்காலிக பணீ நீக்கம் செய்யவோ இல்லை.
தி.மு..க. ஆட்சிக்கு வந்த பிறகும் தான் பல்வேறு பொறுப்புகளில் நீடித்து வருவதாகவும்அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications