தமிழகத்தில் இன்று
மக்கள் கையில் எனது எதிர்காலம் என்கிறார் செளத்ரி
சுவா:
தனது அரசியல் எதிர்காலம் பிஜி மக்களின் கையில்தான் உள்ளது என்று 56 நாட்கள் பிணைக் கைதியாக வைக்கப்பட்டு, வியாழக்கிழமை விடுதலைசெய்யப்பட்ட பிரதமர் மகேந்திர பால் செளத்ரி தெரிவித்தார்.
புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடின் தலைமையில் பிஜி பாராளுமன்ற வளாகத்தில் பிணைக்கைதியாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரதமர் மகேந்திரசெளத்திரியும், அவரது அமைச்சரவையிலுள்ளவர்களும் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட பின் தலைநகர் சுவாவில் நிருபர்களிடம் பேசிய அவர், நான் திரும்பவும் பிஜியின் பிரதமர் பதவிக்கு வரவேண்டுமா? வேண்டாமா? என்பதுகுறித்து பிஜி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். என் அரசியல் எதிர்காலம் அவர்களின் கையில்தான் இருக்கிறது.
நான் நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறேன். பிஜி ஒரு அருமையான நாடு. இந்த நாட்டுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நம்பினால், அனைவரும்ஒன்றாக சேர்ந்து உழைக்க வேண்டும்.
ஜார்ஜ் ஸ்பீட் மேல் எனக்கு எந்தவிதக் கோபமும் கிடையாது. அவர் எனக்கு எதிரியுமல்ல. அவர் மேல் எனக்கு எந்த விரோதமும் இல்லைஎன்றார்.
செளத்ரியும், அவரது அமைச்சரவை சகாக்களும் கடந்த மே 19 ம் தேதி புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் பிணைக்கைதிகளாகபாராளுமன்ற வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
பின்னர் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அவர்களுக்கும், புரட்சிக்காரர்களுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்துபுதன்கிழமை 9 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். வியாழக்கிழமை பிரதமர் மகேந்திர பால் செளத்திரியும், இதர அமைச்சர்களும்விடுவிக்கப்பட்டனர்.
யு.என்.ஐ.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications