தமிழகத்தில் இன்று
வளர்ச்சியில் மகாராஷ்ராவை முந்துகிறது தமிழகம்
சென்னை:
நாட்டில் வளர்ச்சி விகிதத்தில் முன்னணியில் உள்ள நான்கு மாநிலங்களில் தமிழகமும்ஒன்று என்று இந்திய தொழில் வர்த்தக கழகம் இம்மாதம் வெளியிட்டுள்ளஆய்வறிக்கையில் பாராட்டியுள்ளது.
இந்திய தொழில் வர்த்தக கழகம், தொழில் வளர்ச்சி குறித்து மட்டுமல்லாது, உணவுஉற்பத்தி, பணப் பயிர்கள் உற்பத்தி ஆகியவை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்துஅறிக்கை வெளியிடுவது வழக்கம்.
புதிதாக வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் அரிசி உற்பத்தி, எண்ணெய் வித்துக்கள்உற்பத்தி, கரும்பு உற்பத்தி ஆகியவற்றில் தமிழகம் சாதனை படைத்து நாட்டிலேயேமுதலிடத்தை பிடித்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.
அரிசி உற்பத்தித் திறனில் இதுவரை பஞ்சாப் மாநிலம்தான் முதலிடத்தில் இருந்துவந்தது. பஞ்சாப் மாநிலம் ஹெக்டேருக்கு 3465 டன் அரிசி உற்பத்தி செய்து 98ம்ஆண்டு வரையில் முதலிடம் வகித்தது. 1999-ல் இந்த நிலை மாறி தமிழ்நாடுபஞ்சாபை மிஞ்சி சாதனை படைத்துள்ளது என்று தொழில் வர்த்தக அறிக்கைகுறிப்பிடுகிறது.
நிலக்கடலை, சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் 1998-ம்ஆண்டு வரையில் அரியானா மாநிலம்தான் முதலிடம் வகித்தது. ஆனால், 1999ல்தமிழ்நாடு அரியானாவை மிஞ்சி முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டில்ஹெக்டேருக்கு 1579 கிலோ எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது ஒருசாதனை என்றும் இந்த அறிக்கை பாராட்டுகிறது.
அதேபோல் கரும்பு உற்பத்தியிலும் தமிழ்நாடு புதிய சாதனையை எட்டி முதலிடத்தைபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் 1996-ம் ஆண்டில் கரும்பு உற்பத்தி ஒரு லட்சம் டன்னுக்குகுறைவாக இருந்தது. 1999ம் ஆண்டு கரும்பு உற்பத்தி ஒரு லட்சத்து 34 ஆயிரம் டன்அளவை எட்டியிருக்கிறது. இதன் மூலம் மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் போன்றமாநிலங்களை தமிழகம் பின்னுக்கு தள்ளி விட்டது.
தமிழகம் போன்ற உற்பத்தி திறனில் முன்னணியில் உள்ள மாநிலங்களைஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ள இந்திய தொழில் வர்த்தக கழகம், பின்தங்கியுள்ள மாநிலங்கள் உற்பத்தி திறனை அதிகரித்துக் கொள்வதற்கானவழிமுறைகளையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.
இதனிடையே புதிய பொருளாதார கொள்கை அமல்படுத்தப்பட்டதற்கு பின்னர்மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்து தனி ஆய்வும் நடத்தப்பட்டுள்ளது.இதில் ஆண்டு வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டிலுள்ள 15பெரிய மாநிலங்களை 3 வகையாக பிரித்துள்ளனர்.
முன்னணி மாநிலங்கள் பிரிவில் 4 மாநிலங்கள் உள்ளன. அவற்றில் தமிழ்நாடும் ஒன்று.கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகியவை மற்ற மூன்று மாநிலங்கள்.
நடுத்தர மாநிலங்கள் வரிசையில், ஆந்திரா, அரியானா, கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. வளர்ச்சி விகிதத்தில் மிகவும் பின் தங்கியுள்ளமாநிலங்கள் என்ற மூன்றாம் பிரிவில் பீகார், உத்தர பிரதேசம், ஒரிசா, அஸாம்,ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகியவை உள்ளன.
தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு, குஜராத்தை பின்னுக்கு தள்ளி விட்டு முதலிடத்தைபிடிக்க மகாராஷ்டிராவுடன் போட்டி போட்டு வருவதாக முன்பு வெளியான ஒருஆய்வில் தெரிவிக்கப்படிருந்தது.
இந்நிலையில் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் தமிழ்நாடு முதல் நிலையைஎட்டியிருக்கிறது. இது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி என்று அரசு வட்டாரம்மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications