தமிழகத்தில் இன்று
சார்க் அமைப்புக்கு உயிர் கொடுக்கக் கோருகிறார் குஜ்ரால்
டெல்லி:
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பிற்கு (சார்க்) உயிர் கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர்ஐ.கே.குஜ்ரால் கூறியுள்ளார்.
இந்திய, பாகிஸ்தானிய கருத்து வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு சார்க் நடவடிக்கைகளில் தேக்க நிலை ஏற்படக் கூடாது என்றும் அவர்கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில், சார்க் அமைப்பின் மாநாடு நடப்பதாக இருந்தது. இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்டஅரசு பாகிஸ்தானில் இல்லை என்று கூறி இந்தியா மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்து விட்டது.
இருப்பினும், கார்கில் போருக்குக் காரணமாக இந்தியா கருதும், முஷாரப் பாகிஸ்தானின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால், அவருடன் மேடையைப் பகிர்ந்துகொள்ள இந்தியா தயார் இல்லை என்பதால்தான் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளவில்லை என்று இந்தியத் தரப்பில் தனிப்பட்ட முறையில்தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சார்க் அமைப்பு குறித்து ஐ.ஏ.என்.எஸ்சுக்கு குஜ்ரால் அளித்த பேட்டியில், இந்திய, பாகிஸ்தானிய உறவுகளை அடிப்படையாக வைத்து சார்க்செயல்பாடுகள் இருக்கக் கூடாது. அதுபோன்ற சூழ்நிலை ஏற்படக் கூடாது. அப்படிப்பட்ட தவறான கருத்தும் ஏற்பட அனுமதிக்கக் கூடாது. தெற்காசியநாடுகள் இணைந்து உருவாக்கிய அமைப்பாகவே, சார்க் அமைப்பை பார்க்க வேண்டும்.
பாகிஸ்தான் இருக்கிறதோ அல்லது இல்லையோ, சார்க் அமைப்பு செயல்பட வேண்டும். முஷாரப்பை நமக்குப் பிடித்திருக்கிறதோ அல்லது இல்லையோ,அதற்காக சார்க் செயல்பாடுகள் தடைபடக் கூடாது.
சார்க் அமைப்பை மறுபடியும் தடங்கலின்றி செயல்படுத்தத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதியுள்ளேன்.ஆனால் இதுவரை பதில் இல்லை.
லாகூருக்குப் பிரதமர் வாஜ்பாய் மேற்கொண்ட பயணம் பாராட்டத்தக்கது. இதேபோல, கார்கில் போருக்குப் பிறகு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில்,பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வாஜ்பாய் மறுத்திருப்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications