தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

குவைத்தில் வீட்டு வேலை பார்க்க இந்தியர்களுக்கு தடை நீங்கும்

குவைத்:

இந்தியாவிலிருந்து குவைத்திற்கு வீட்டுவேலைகளுக்காகச் செல்லும் இந்தியர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை விரைவில் நீக்கப்படும் என்று மத்தியவெளியுறவுத்துறை அமைச்சர் அஜித் குமார் பாஞ்சா தெரிவித்தார்.

குவைத்திற்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாகச் சென்ற அவர் பயணத்தின் இறுதி நாளான புதன்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியர்கள் பலர் குவைத்திற்கு வேலை தேடிச் செல்கின்றனர். இவர்களில் வீட்டுவேலை செய்யச் செல்பவர்கள் மீது இந்திய அரசு தடை விதித்திருந்தது.தவறான ஏஜென்டுகளிடம் சிக்கி, அங்கு சென்று அடிமைகளாக இருப்பதை தடுக்கும் வகையில் இந்த தடையை இந்திய அரசு விதித்திருந்தது.

குவைத்தில் வீட்டு வேலை செய்பவர்கள் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்று மனித உரிமைக்குழுவிற்குக் கிடைத்த தகவல்படியும் இந்தத் தடையைஅரசு விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் வீட்டு வேலை பார்க்கும் பெண்கள், கீழ்த்தரமாகவோ, அல்லது அடிமையாகவோ நடத்தப்படவில்லை என்று செய்திகள் கிடைத்துள்ளதால்,தடையை நீக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

அங்கு வேலை செய்யும் இந்தியர்களின் நிலை என்ன? அவர்கள் அடிமைத்தனமாய் நடத்தப்படுகிறார்களா? என்பது குறித்து விசாரிக்க உயர்அதிகாரிகள்கொண்ட இந்திய நிபுணர் குழு ஒன்று விரைவில் குவைத் செல்கிறது. அவர்கள் இந்த ஆண்டு இறுதியிலோ, அல்லது வரும் ஆண்டு பிப்ரவரி மாதத்திலோசெல்வார்கள்.

சட்டவிரோதமான முகவர்கள் மூலம் குவைத்தில் வீட்டுவேலைக்குச் செல்பவர்களில் பெரும்பாலானோர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.இந்திய அரசு விதித்துள்ள தடை நீக்கப்பட்டபின் அவர்கள் குவைத்திற்குச் செல்ல முடியும்.

குவைத்தில் வேலை செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 80 ஆயிரம் பேராக உள்ளது. அவர்கள் அனைவரும் குவைத்தின்முன்னேற்றத்திற்குப் பாடுபடுகிறார்கள் என்று அந்நாட்டினரே பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தடை நீக்கப்பட்டபின் இந்தியாவிலிருந்து டாக்டர்கள், நர்சுகள், மற்றும் மருத்துவ உதவியாளர்கள் உள்பட 1500 பேர் மருத்துவப்பணிக்காக குவைத்செல்லவுள்ளனர். இனிமேல் பிறவெளிநாடுகளுக்குச் செல்வது போல் இந்திய மக்களும் குவைத்திற்கும் செல்லலாம் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+