தமிழகத்தில் இன்று
பிகார் சட்டசபைக்குள் துப்பாக்கிகளுடன் திரியும் எம்.எல்.ஏ.க்கள்
பாட்னா:
பிகார் சட்டசபைக் கூட்டத்தொடருக்கு சட்டைக்குள் துப்பாக்கியை மறைத்துக்கொண்டு வரும் எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இனிமேல் இவர்கள் துப்பாக்கியுடன் வருவதற்குத் தடைவிதிக்கப்படும் என்று முதல்வர் ராப்ரிதேவி தெரிவித்தார்.
பிகாரில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்து இருப்பதால் சட்டசபைக் கூட்டத்தொடருக்கு வருவதற்குஎம்.எல்.ஏக்கள் அஞ்சுகிறார்கள். அதனால் அவர்கள் பாதுகாப்புக் கருதி துப்பாக்கியை தங்களது சட்டைப்பையில்மறைத்து வைத்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களது அந்தரங்கப் பாதுகாவலர்களும் சட்டசபை வளாகங்களில்அதிகம் நடமாடுகிறார்கள்.
இதுகுறித்து பிகார் முன்னாள் முதல்வர் லல்லுப் பிரசாத் யாதவ் கூறுகையில், இந்த நிலை மாற வேண்டும்.சட்டசபைக்குள் ஆயுதங்களுடன் வரக்கூடாது என்று அவர்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். ராஷ்டிர ஜனதாக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இதற்கு ஓத்துழைப்பு கொடுப்பார்கள். பிற கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் ராஷ்டிரியஜனதாக் கட்சி சார்பில் ஆயுதங்களுடன் சட்டசபைக்குள் வரக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.
சட்டசபை வளாகத்தில் எம்.எல்.ஏ.க்களின் அந்தரங்கப் பாதுகாவலர்கள் உலவுகின்றனர். இதுகுறித்து இரண்டுநாட்களுக்கு முன் நான் சபாநாயகர் சதானந்த் சிங்கிடம், அவர்களை சட்டசபை வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாதுஎன்று பாதுகாவலர்களுக்கு உத்தரவிடுமாறு கூறினேன் என்றார்.
இதையடுத்து அவர், சட்டசபை நடவடிக்கை குழு வுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில்பிகார் சட்டசபைக்குள் ஆயுதங்களுடன் வரும் எம்.எல்.ஏ.க்களுக்கு தடை விதிக்கப்படும். மேலும் அவர்களதுஅந்தரங்க பாதுகாவலர்கள் சட்டசபை போர்டிகோவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்படும்.
மொத்தம் உள்ள 324 எம்.எல்.ஏக்களில் 40 சதவீதத்தினர் மேல் வழக்குகள் உள்ளன. 12 பேர் கடத்தல், கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்றார்.
இதையடுத்து முதல்வர் ராப்ரிதேவி தலைநகர் பாட்னாவில் எம்.எல்.ஏ.க்கள் துப்பாக்கியுடன் சட்டசபைக்குள்வருவதற்கு விரைவில் தடைவிதிக்கப்படும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications