தமிழகத்தில் இன்று
பதவி இழந்தார் கட்சி மாறிய திமுக எம்.எல்.ஏ.
சென்னை:
அ.தி.மு.க வுக்குத் தாவிய திருமங்கலம் தி.மு.க எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்படி பதவி இழந்துள்ளதாக தமிழக சட்டசபை சபாநாயகர்பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக அவர் அனுப்பியகடிதம் உரிய முறைப்படி இல்லாததால் அவரது ராஜினாமாவை ஏற்க இயலாது என்றும்அவர் கூறினார்.
சென்னையில் வியாழக் கிழமை சபாநாயகர் அளித்த பேட்டி:
மதுரை மாவட்டம் திருமங்கலம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்தமுத்துராமலிங்கம், கடந்த மாதம் 26ம் தேதி திடீரென்று அ.திமு.க வில் சேர்ந்தார்.
27ம் தேதி ஜெயலலிதா முன்னிலையில் அவர் அ.தி.மு.க.வில் இணைந்த செய்தியும்,படம் பத்திரிகைகளில் வெளியானது. அதற்கு அடுத்த நாள் 28ம் தேதி காலை 10.30மணிக்கு மேட்டுப்பாளையம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அருண்குமாரிடம் இருந்துஎனக்கு ஒரு கடிதம் வந்தது.
முத்துராமலிங்கம் அ.தி.மு.க வில் இணைந்து விட்டார். கட்சித் தாவல் தடைச்சட்டப்படி அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் நீடிக்கத் தகுதி இழந்துவிட்டார் என்று நீங்கள் அறிவிக்க வேண்டும் என்று அதில் அவர் கேட்டுக் கொண்டார்.
அன்று மாலையே "பேக்ஸ் மூலம் முத்துராமலிங்கத்திடம் இருந்து ராஜினாமா கடிதம்வந்தது. பேக்ஸ் கடிதங்களை ஆவணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதால்அவரது ராஜினாமாவை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
எனவே கட்சித் தாவல் தடைச் சட்டப்படி பதவி நீக்கம் செய்யக் கோரி கடிதம்வந்துள்ளது பற்றியும், உடனடியாக விளக்கம் அளிக்கும்படியும் முத்துராமலிங்கத்திற்குகடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு ஜூன் 30ம் தேதி பதில் அனுப்பியிருந்தார் அவர்.அதோடு கைப்பட எழுதிய ராஜினாமா கடிதம் ஒன்றையும் இணைத்திருந்தார். ஆனால்,அந்த கடிதம் பேரவை விதிப்படி உரிய முறையில் இல்லை.
ஜெயலலிதா நல்லவர், வல்லவர் என்று ஏதேதோ எழுதியிருந்தார். எனவே அதைசட்டப்படி ஏற்க முடியாது. அப்படி ஏற்றால் பேரவை விதிகளை மீறியதாகி விடும்.
அவர் கட்சித் தாவல் சட்டப்படி தகுதி இழக்கிறார் என்பதால், முன்னாள் சட்டமன்றஉறுப்பினருக்குரிய பென்ஷன் உள்ளிட்ட சலுகைகள் எதுவும் கிடைக்காது என்றுவெளியான செய்திகள் தவறு.
1991ல் அ.தி.மு.க வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு சட்டமன்றஉறுப்பினராக இருந்தார். 20.4.1995-ல் அவர் கட்சித் தாவல் தடைச் சட்டப்படி தகுதிஇழந்தார். ஆனால், அவருக்குரிய சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதுமுத்துராமலிங்கத்திற்கும் பொருந்தும் என்றார் சபாநாயகர்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!











Click it and Unblock the Notifications