கவிஞர் கொண்டாடிய கவிஞர் தினம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கவிஞர் வைரமுத்து தனது 47-வது பிறந்த நாளை, வியாழக்கிழமை கவிஞர் தினமாகக் கொண்டாடினார்.

வைரமுத்து சமூக இலக்கியப் பேரவை சார்பில் கவிஞர் தின விழாவை வியாழக் கிழமை வைரமுத்து கொண்டாடினார். கவிஞர்கள் தமிழன்பன், ஆண்டாள்பிரியதர்ஷினி ஆகியோருக்கு கவிஞர் தின விருதாக தலா ரூ. 5 ஆயிரம் வழங்கினார் வைரமுத்து.

முன்னதாக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்த நாள் ஆசி பெற்றார்.

வைரமுத்துவின் "பெய்யெனப் பெய்யும் மழை கவிதை நூல் பற்றிய ஆங்கிலத் திறனாய்வு நூலும், வைரமுத்துவின் திரைப்பட பாடல்கள் பற்றிஎழுதப்பட்ட "திரைக் கம்பன் வைரமுத்து என்ற ஆராய்ச்சிக் கட்டுரை நூலும் விழாவில் வெளியிடப்பட்டன.

வைரமுத்து சமூக இலக்கியப் பேரவையை சேர்ந்தவர்கள் மாவட்ட வாரியாக வைரமுத்துவை வாழ்த்தினர்.

முன்னதாக மறைந்த கவிஞர்கள் திருவள்ளுவர், கம்பர், வீரமாமுனிவர், அவ்வையார், பாரதியார், பாரதிதாசன், இளங்கோவடிகள், கண்ணதாசன்ஆகியோர் சிலைகளுக்கு வைரமுத்து மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இயக்குனர்கள் பாரதிராஜா, களஞ்சியம், நடிகர்கள் ராஜேஷ், சரண் மற்றும் பலர் வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வைரமுத்து வீட்டுக்கு எதிரே ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இதற்கு வைரமுத்து சமூக இலக்கிய பேரவை, டிரஸ்ட்புரம் ஆட்டோ நிலையம் என்றுபெயரிடப்பட்டுள்ளது. இதை வைரமுத்து திறந்து வைத்து ஆட்டோ டிரைவர்களின் குழந்தைகள் கல்விக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+