தமிழகத்தில் இன்று
இந்திய- வங்கதேச எல்லையில் துப்பாக்கிச் சண்டை தொடர்கிறது
ஷில்லாங்:
மேகாலயாவிலுள்ள எல்லைப் பகுதியில், இந்திய, வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து புதன்கிழமையும் துப்பாக்கிச் சண்டையில்ஈடுபட்டனர்.
முக்தாபூர் அருகே, சிரிபூர் எல்லைப் பாதுகாப்புப் படை முகாம் அருகே இந்த துப்பாக்கிச் சண்டை நடந்தது. பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் எத்தனை பேர்காயமடைந்தனர் என்று தெரியவில்லை.
இதற்கிடையே, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டதில் இறந்த வங்கதேசத்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
10-ம் தேதி ரங்க்தில்லா கிராமத்தில், இந்திய எல்லைக்குள் ஊடுறுவ முயன்ற மூன்று வங்கதேச ஊடுருவல்காரர்களை எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர் திருப்பிச் சுட ஆரம்பித்தனர். அப்போது முதல் இரு தரப்பினருக்கும்இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications