தமிழகத்தில் இன்று
ராணுவ உதவியுடன் தீவிரவாதிகளை ஒடுக்க பூடான் முடிவு
டெல்லி:
பூடானில் ஊடுருவியுள்ள அசாம் தீவிரவாதிகளை ராணுவத்தைக் கொண்டு வெளியேற்ற பூடான் அரசு முடிவு செய்துள்ளது.
பூடானிலிருந்து வெளியாகும் க்யூன்செல் என்ற பத்திரிக்கையில் இதுதொடர்பாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த, தடைசெய்யப்பட்ட ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா) மற்றும் பூடான் தேசிய ஜனநாயக முன்னணி(என்.டி.எஃப்.பி)ஆகிய அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதகிகள் தனிநாடு கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பூடானில் இருந்து கொண்டு இவர்கள் அடிக்கடி அசாமிற்கு வந்து தாக்குதல் நடத்திவருகிறார்கள். பூடானின் பல்வேறு பகுதிகளில் 1992 ம் ஆண்டு முதல்இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். மொத்தம் 12-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளின் முகாம்கள் பூடானில் உள்ளதாகத் தெரிகிறது.
தீவிரவாதிகளின் செயல்பாடுகளைத் தடுக்குமாறு பூடான் அரசுக்கு இந்தியா பலமுறை எச்சரிக்கை விடுத்து வந்துள்ளது. இருப்பினும், தீவிரவாதிகளைஅடக்க முடியாமல் பூடான் அரசு திணறி வந்தது.
ராணுவத்தினரின் உதவியில்லாமல் இவர்களை வெளியேற்ற முடியாது என்று பூடான் அரசு தற்போது உணர்ந்துள்ளது. இதுகுறித்து பூடான் ராணுவ அதிகாரிலெப்டினெட் ஜெனரல் கூங்லோயின் கோங்மா லேம் டோர்ஜி கூறுகையில், ஏற்கனவே அசாம்-பூடான் எல்லைப் பகுதியிலுள்ள காலிகோலி, டாய்பாம்பகுதிகளில் 4000 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை பூடான் அரசு நிறுத்தியுள்ளது.
தீவிரவாதிகள் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கும், அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதற்கும் பூட்டான் அரசு பல்வேறு கருவிகளை வாங்குகிறது.
தீவிரவாதிகளை வெளியேற்றுவது தொடர்பாக பூடான் அரசு, உல்பா மற்றும் என்டிஎஃப்பி தீவிரவாதிகளுடன் 1998ல் இரண்டு முறைப்பேச்சுவார்த்தை நடத்தியது. அப்பேச்சுவார்த்தை தோல்வியையே தழுவியது.
தற்போது தீவிரவாதிகளை விரட்டும்படி இந்தியா நெருக்கடி கொடுத்துள்ளதையடுத்து பூடான் அரசு விழிப்படைந்துள்ளது. ராணுவம் தான் தீவிரவாதிகளைவிரட்டுவதற்கான ஒரே வழி என்று தீர்மானித்துள்ளது.
விரைவில் ராணுவம மூலம் பூடானில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்தப் பத்திரிக்கைச் செய்தி தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications