தமிழகத்தில் இன்று
சர்ச் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் பாக். தீவிரவாத அமைப்பு
கோவை
கர்நாடகம், ஆந்திரம், கோவா ஆகிய மாநிலங்களில் கடந்த ஆறு வாரங்களில் சர்ச்களில் நடந்தகுண்டுவெடிப்புகளுக்கு பாகிஸ்தான்ஆதரவு தீந்தார் அஞ்சுமான் என்ற தீவிரவாத அமைப்புதான்காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த மாநிலங்களில் மத்திய புலனாய்வுத்துறை நடத்திய விசாரணையில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.அஞ்சுமான் அமைப்புக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜியா உல் ஹசன் ஆதரவு தருகிறார். இந்த முக்கியத்தகவல் தற்போது பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைதாகி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் இப்ராகிம் கூறியுள்ளார்.
மேலும், சிறுபான்மையினருக்கு எதிராக வாஜ்பாய் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தவும், இதன்மூலம், அரசைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாகவும் இப்ராஹிம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
கோவையில் உள்ள சர்ச்சுகளில் குண்டு வைத்து தகர்க்கவும் திட்டமிட்டிருந்ததாகவும் அவர்கூறியுள்ளதாகத் தெரிகிறது. பெங்களூர் சர்ச்சில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில், அப்துல் ரகுமான்சித்திக், ஜக்கீர் ஆகியோர் இறந்தனர். இதில் காயமடைந்த இப்ராஹிம், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இவர்கள் 3 பேரும் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள்.
கடந்த மார்ச் மற்றும் மாதங்களில் கோவா சென்று மாருதி காரை இப்ராகிம் வாங்கியுள்ளார். மே21-ம் தேதி முதல் குண்டுவெடிப்பில் இந்தக் கும்பல் ஈடுபட்டது. ஜியா உல்ஹசன், வருடத்திற்கு ஒருமுறைஇந்தியா வருவார். பாகிஸ்தானில், ஜமாத் ஹிஸ்புல்லா முஜாகிதீன் என்ற அமைப்பை நிறுவியுள்ளார்.இதற்கு மர்தான், லாகூர், கராச்சி, பைசலாபாத், ராவல்பிம்டி, சர்கோதா ஆகிய ஊர்களில் கிளைகள்உள்ளன.
ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிராவில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளதாகத்தெரிகிறது. மே 21-ம் தேதிக்குப் பிறகு இதுவரை 12 குண்டுவெடிப்புகளில் இவர்களுக்குத் தொடர்புஉள்ளது. கடைசியாக பெங்களூர் செயின்ட் பால் சர்ச்சில் இவர்கள் குண்டு வைத்தனர்.
யு.என்.ஐ.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications