தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 வீரர்கள் சாவு
பாரமுல்லா:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் இரண்டுதீவிரவாதிகளும், இரண்டு பாதுகாப்புப் படை வீரர்களும் இறந்தனர்.
ஹப்ரதா வனப் பகுதியில் இந்த மோதல் நடந்தது. இதில் மூன்று வீரர்கள் காயமடைந்தனர். பாரமுல்லா மாவட்டம், ரஃபிபாத் என்ற இடத்தில்தீவிரவாதிகள் தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரியும், இன்னொரு வீரரும் கொல்லப்பட்டார்.
நான்கு மணி நேரம் இப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. தப்பி ஓடிய மற்றும் காட்டுப் பகுதியில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளைத் தேடும் பணியில்பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications