தமிழகத்தில் இன்று
தமிழகத்திற்கு 6 டி.எம்.சி. காவிரி நீர் வழங்குகிறது கர்நாடகம்
சென்னை:
தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 6 டி.எம்.சி. நீரை அடுத்த 30 நாட்களுக்குள் விட கர்நாடகம் ஒப்புக்கொண்டுள்ளது.
டெல்லியில் வெள்ளிக்கிழமை காவிரி நீர் ஆணைய கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழக முதல்வர்கருணாநிதி, கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, கேரள முதல்வர் நாயனார், பாண்டிச்சேரி முதல்வர்சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிரதமரும், ஆணையத் தலைவருமான வாஜ்பாய்தலைமை வகித்தார். கூட்டம் சுமூகமான சூழ்நிலையில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பற்றாக்குறை நீரை கொடுப்பதாகதெரிவித்தார். தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. காவிரி நீரைக் கொடுக்க வேண்டும் என்றுகாவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜூன்மாதத்திற்கான பங்கு நீரில் ஆறு டி.எம்.சி. நீர் குறைத்து விடப்பட்டது.
இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள குறுவைப் பயிர்கள் நீரின்றி வாடுவதால்,பற்றாக்குறை நீரை கர்நாடகம் விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கோரிக்கைவிடுத்திருந்தார். இதை ஏற்று, இந்த நீரை இன்னும் 30 நாட்களுக்குள் கொடுப்பதாக தற்போதுகர்நாடகம் உறுதியளித்துள்ளது.
காவிரி ஆணையக் கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் மததிய கேபினட்செயலாளர் பிரபாத் குமார் கூறுகையில், தனக்குக் கிடைக்கும் நீரைக் கொண்டு பாண்டிச்சேரிக்குரியபங்கைக் கொடுப்பதாக தமிழகம் உறுதியளித்துள்ளது என்றார்.
காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை முழுமையான முறையில் அமல் செய்வதுதொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், காவிரி நீர் ஆணையத்தின் விதிமுறைகள்,செயல்பாடுகள் குறித்தும் விவாதித்து இறுதி செய்யப்பட்டது.
முன்னதாக கூட்டத்தில் பேசிய பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம், காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பைசரியான முறையில் அமல் செய்யத் தேவையான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று யோசனைதெரிவித்தார்.
கூட்டத்தின் இறுதியில் நான்கு மாநில முதல்வர்களும், ஆணையக் கூட்டத்தைக் கூட்டியதற்காகபிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications