தமிழகத்தில் இன்று
யூகோ. அதிபரைக் "கொன்ற இன்டர்நெட் ஊடுறுவல்காரர்கள்
பெல்கிரேட்:
இன்டர்நெட் ஊடுறுவல்காரர்களின் சேஷ்டைகள், யூகோஸ்லேவியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூகோஸ்லேவிய அரசுக்குச் சொந்தமான பொலிட்டிகா பத்திரிகையின் இன்டர்நெட் தளத்திற்குள் புகுந்த அவர்கள், யூகோ. அதிபர் ஸ்லோபதன் மிலசோவிச்,குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதாக செய்தியை பரப்பி விட்டனர்.
யூகோஸ்லேவிய நேரப்படி இரவு 10 மணிக்குத்தான் இந்த செய்தி பார்க்கப்பட்டுள்ளது. உனடியாக இன்டர்நெட் தளம் முடக்கப்பட்டது. முழுமையான ஒருசெய்தியாக இந்த வதந்தி தரப்பட்டிருந்தது.
தலைப்பு கொடுத்து, அதற்குக் கீழே பல பாராக்களுடன், எப்படி மிலசோவிச் "கொல்லப்பட்டார் என்று அதில் விளக்கப்பட்டிருந்தது. இந்தச் செய்திக்குசெய்திக்கு லிங்க் கொடுக்கப்படவில்லை.
வதந்திச் செய்தி வருவதற்கு முதல் நாள், மிலசோவிச்சின் செயல்பாடுகள் குறித்து செய்தியை இதே ஊடுறுவல்காரரர்கள் வெளியிட்டிருந்தனர்.
பொலிட்டிகா பத்திரிகையின் இன்டர்நெட் தளத்தில், ஊடுறுவல்காரர்கள் புகுந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
இதுதான் அந்த வதந்திச் செய்தி: யூகோஸ்லேவிய அதிபர் ஸ்லோபதன் மிலசோவிச், குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைபலனளிக்காமல் இறந்தார். டெடின்ஜே என்ற இடத்தில் உள்ள அவரது பதுங்கு குழியில் இந்தச் சம்பவம் நடந்தது என்று கூறப்பட்டிருந்தது.
தலைநகர் பெல்கிரேடின் புறநகரிலுள்ள டெடின்ஜே பகுதியில்தான் அதிபர் மாளிகையும், மிலசோவிச்சின் வீடும் உள்ளது.
யு.என்.ஐ.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications