தமிழகத்தில் இன்று
இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தைக் காக்க கோரிக்கை
கோவை:
ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் (எச்.பி.எப்) தொழிற்சாலையை மூடாமல் இருக்கத்தேவையான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என நீலகிரியில் உள்ள 3 எம்.எல்.ஏ.க்கள்வலியுறுத்தியுள்ளனர்.
வியாழக்கிழமை, ஊட்டி எம்.எல்.ஏ., குண்டன், குன்னூர் எம்.எல்.ஏ., ரங்கநாதன், மற்றும் அரசு கொறடா முபாரக்ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
நீலகிரி தேயிலைப் பிரச்னை தொடர்பாக அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு தனது அறிக்கையை கடந்த 30ம் தேதிசமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம்.வெளிநாட்டில் இருந்து தேயிலை இறக்குமதி செய்வதையும் தடைசெய்யக் கோரிக்கை விடுத்துள்ளோம்.
எச்.பி.எப் தொழிற்சாலை தற்போது மூடப்படும் அபாயத்தில் உள்ளது. எனவே, இதனைத் தடுக்க முதல்வர்கருணாநிதி மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும்மின்சாரத்திற்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications