தமிழகத்தில் இன்று
சென்னை:
கோடம்பாக்கத்திலிருந்து அரசியல் கோட்டைக்கு வருகிறார் இன்னொரு திரைநட்சத்திரம். அவர் ...விண்ணும், மண்ணும் சொல்லும் ரம்பா.
அரசியலும், சினிமாவும் தமிழகத்திலும்,ஆந்திரத்திலும் ஒன்றுடன் ஒன்று கலந்தசயாமிஸ் இரட்டையர் போல. தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா, இப்போதைய முதல்வர் கருணாநிதி ஆகியோர் சினிமா பின்னணியில்இருந்து வந்தவர்கள். பின்பு அரசியலில் மாபெரும் சக்தியாக உருவெடுத்தவர்கள்.
சிவாஜி கணேசன்,விஜயசாந்தி,ஜெயப்பிரதா, சரத்குமார் என்று பலரும் அரசியலில்குதித்தார்கள். தெலுங்கு படவுலகில் என்.டி.ஆர். தற்பொழுது அந்த வரிசையில்,லேட்டஸ்டாக அரசியலில் குதிக்க இருப்பவர் நடிகை ரம்பா.
தமிழ்த்திரையுலகிலும்,தெலுங்குத்திரைப்பட உலகிலும் நடிகை ரம்பாவுக்கென்று தனிஇடம் இருக்கிறது. இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனதுகட்சியான தெலுங்குதேசம் கட்சியில் சேருமாறு ரம்பாவுக்கு அழைப்புவிடுத்துள்ளாராம். ரம்பாவும் அதை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல்.
இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்பில்லை என்றாலும் ரம்பா அரசியலில் குதித்துஆந்திர அரசியலை கலக்குவது உறுதி என்கிறார்கள். தற்பொழுது தெலுங்குபடப்பிடிப்புக்காக லண்டனில் ரம்பா இருக்கிறார். திரும்பியவுடன் அரசியல் பிரவேசஅறிக்கைகள் வரும் என்கிறார்கள்.
ரம்பாவுக்குப் போட்டியாக மீனா?
தெலுங்கு தேசம் ரம்பாவை அழைத்தால் நாங்கள் மீனாவை அழைப்போம் என்றுகளமிறங்கி இருக்கிறதாம் காங்கிரஸ் கட்சி. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்துவருகிறது என்கிறார்கள் தமிழக அரசியல் பிரமுகர்கள்.
இதுவரை அரசியல் என்று மிக சீரியசாக பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்ததிரையுலக தாரகைகளின் வரவேற்பு வரப்பிரதாசம்தான்.
வாழ்த்துக்கள் ரம்பா. உங்கள் சேவை (?!) அரசியலிலும் தொடரட்டும்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications