தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழக முதல்வர்கருணாநிதி முதல்வராக இருப்பதால் தமிழ்த் திரையுலகுக்கு இனி நல்லகாலம் என்று தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் சரத் குமார் கூறியுள்ளார்.
நடிகர் சரத்குமார் வெள்ளிக் கிழமை தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். நடிகர்கள்விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், நெப்போலியன், முரளி, விவேக் உள்ளிட்ட நடிகர்கள்,குஷ்பு, ரேவதி, வினிதா உள்ளிட்ட நடிகைகள், சென்னை மேயர் ஸ்டாலின்,மு.க.அழகிரி உள்ளிட்ட தி.மு.க பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காலை 8 மணிக்கு பிறந்த நாள் கேக்வெட்டினார் சரத் குமார். மனைவி, மகள்களுக்கு அதை ஊட்டினார். பின்னர் அவருக்குநடிகர் விஜயகாந்த், முரளி, நெப்போலியன், விவேக், மயில்சாமி, இயக்குனர்கள்சேரன், ராஜகுமாரன், சூர்யகுமார், பவித்ரன் ஆகியாாேர் பொன்னாடை அணிவித்துபிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வர் கருணாநிதியின் மகன்களான மேயர் ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோர்தொலைபேசியில் சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதேபோல் நடிகர்கள் பிரபு, சத்யராஜ், அர்ஜூன், பார்த்திபன், சிவகுமார்,கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், நடிகைகள் ரேவதி, குஷ்பு, ராதிகா மற்றும் பலர்தொலைபேசியில் வாழ்த்தினர்.
பிறந்த நாளை முன்னிட்டு செய்தியாளர்களுக்கு சரத்குமார் அளித்த பேட்டியில்,திரையுலகத்திற்கு இப்போது நல்ல காலம் பிறந்துள்ளது. தமிழக முதல்வராகதிரையுலகை சேர்ந்த கருணாநிதி இருப்பதாலும், நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த்பொறுப்பேற்றுள்ளதாலும் திரையுலகத்தினருக்கு ஒளிமயமான எதிர்காலம்பிறந்துள்ளது.
எந்த பிரச்னையாக இருந்தாலும் நமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.அதற்கான முயற்சிகளில் நடிகர் சங்கம் ஈடுபடும்.
கடந்த வருடம் "ஒருவன் படம் நன்றாக இருந்தாலும், சரியாக ஓடவில்லை. இப்போது"மாயி படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படம் நன்றாக வரும் என்றுநம்புகிறேன்.
ஹே ராம் மாதிரி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு சரியாக போகவில்லைஎன்றால் பிரச்னையாகி விடும் என்பதால், படத்தின் ரீலிசை ஏப்ரலில் இருந்துஆகஸ்ட்டுக்கு தள்ளி வைத்துள்ளோம் என்றார் அவர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications