தமிழகத்தில் இன்று
இந்திய சாப்ட்வேர் என்ஜீனியர்களை இருகரம் நீட்டி அழைக்கிறது யு.ஏ.இ.
துபாய்:
துபாயில் உருவாகி வரும் இன்டர்நெட் சிட்டி மற்றும் தகவல் தொழில்நுட்பப்பணியாளர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கொடுத்து வரும் ஆதரவு காரணமாக,இந்திய கம்ப்யூட்டர் என்ஜீனியர்களுக்கு எமிரேட்ஸில் வேலைவாய்ப்புஅதிகரித்துள்ளது.
எமிரேட்ஸில் இந்திய கம்ப்யூட்டர் என்ஜீனியர்களுக்கு உள்ள வேலை வாய்ப்பு குறித்துஇந்த வாரம் துபாயில், இந்தியத் தூதர் கே.சி சிங் மற்றும் எமிரேட்ஸ் நாட்டுக்கானதொழிலாளர் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் மட்டார் ஹுமைட் டேயர் ஆகியோர்விவாதித்தனர்.
இந்த சந்திப்பின்போது, தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின்உதவி எமிரேட்ஸுக்குத் தேவை என்பதை டேயர் வலியுறுத்தினார். எமிரேட்ஸ், தகவல்தொழில் நுட்பத்தில் அதிகம் கவனம் செலுத்துவதால், தகவல் தொழில் நுட்பத்தில்சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் தேவைப்படுகிறார்கள். இது மட்டுமல்லாமல் சுற்றுலாத்துறைக்கும் பணியாளர்கள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
துபாயில், இன்டர் நெட் நகரம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. மேலும்,இப்பிராந்தியத்தில் தகவல் தொழில் நுட்ப மையமாக உருவாக எமிரேட்ஸ்விரும்புகிறது. இதன் பொருட்டே, இன்டர்நெட் நகரம் உருவாகி வருகிறது. இதற்குமிகவும் தகுதி வாய்ந்த தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் அதிகம்தேவைப்படுகிறார்கள். இது இந்திய கம்ப்யூட்டர் என்ஜீனியர்களுக்குச் சாதகமாகஅமைந்துள்ளது.
வெளி நாட்டினர் இங்கு வேலைக்கு அமர்த்தப்பட இருப்பதால் பணியாளர்களின்எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் சம்பந்தப்பட்ட துறைக்குத் தேவைப்படும் தகவல்தொழில்நுட்பப் பணியாளர்கள், ஏற்கனவே பணிபுரிந்து நாடு திரும்பியவர்களில்இருந்து தேர்வு செய்யப்படுவார்கள்.
எமிரேட்ஸ் வரும் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு தொழிலாளர்சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எழாமல் இருப்பதற்காக, இங்கு வரும் முன்பேஅவர்களுக்குத் தொழிலாளர் சட்ட திட்டங்கள் பற்றி அறிவுறுத்தப்படும் என்றும்,வேறேதும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதிகாரிகளிடம் கூறி உதவிகள் பெறலாம்என்றும் எமிரேட்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பணி புரிவதற்கான விசாதருவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை எமிரேட்ஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்விதித்தது. தற்போது கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் தேவைப்படுவதால், இந்தக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா என்று டேயரிடம் கேட்டபோது, அப்படி ஏதும் எண்ணம்இல்லை என்றார்.
வளைகுடா நாடுகளின் மொத்தம் மக்கள் தொகை 27 மில்லியன். இவர்களில் 35சதவீதம் வெளிநாட்டவர்கள். இதில், 75 சதவீதம் பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும்கத்தார் நாடுகளில் இருக்கிறார்கள். பஹ்ரைனில் 30 சதவீத வெளிநாட்டவர்கள்இருக்கிறார்கள். குவைத்தில் 56 சதவீதம் பேரும், சவூதி அரேபியா மற்றும் ஓமன்நாடுகளில் 27 சதவீதம் பேரும் இருக்கிறார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications